ஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க!

இந்த மெய்நிகர் அனுபவமானது நியூயார்க் நகரத்தில் உள்ள ஏ.எம்.சி லிங்கன் சதுக்கத்தில், அக்டோபர் 6 முதல்14 வரை திரையிடப்படுகிறது.

|

எப்போதாவது நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவில் பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று விரும்பியதுண்டா?. இதோ இந்த மாதம் அதை உங்களுக்கு சாத்தியமாக்குகிறது - மெய்நிகர் தொழில்நுட்பம்(Virtual Reality).

ஆம்ஸ்ட்ராங் உடன் நிலவுக்கு பயணிக்கலாம் வாங்க!

ஆம்ஸ்ட்ராங்கின் சாதனைகளை கூறும் ஹாலிவுட் படமான "பர்ஸ்ட் மேன்" மற்றும் ஆம்ஸ்ட்ராங்-ஐ சிறப்பித்து கொண்டாடும் வகையில், கடந்த வாரம் முதல் அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எம்.சி திரையரங்குகளில் "முதல் மனிதன்: மெய்நிகர்அனுபவம்"(First Man: The Virtual Reality Experience) திறக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர்

மெய்நிகர்

இந்த மெய்நிகர் அனுபவமானது நியூயார்க் நகரத்தில் உள்ள ஏ.எம்.சி லிங்கன் சதுக்கத்தில், அக்டோபர் 6 முதல்14 வரை திரையிடப்படுகிறது. கலிபோர்னியாவின் சிட்டிவாக் ஹாலிவுட்டில் உள்ள யுனிவர்சல் சினிமா ஏ.எம்.சி, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏ.எம்.சி மெட்ரியான்16, வாஷிங்டன் டிசியில் உள்ள ஏ.எம்.சி ஜார்ஜ்டவுன் என்ற மூன்று திரையரங்குகளிலும் அக்டோபர் 5 முதல் 14 வரை திரையிடப்படுகிறது.

சாட்டர்ன் வி

சாட்டர்ன் வி

பார்வையாளர்கள் தங்களது பயணத்தை ஹூஸ்டனில் உள்ள நாசாவின் மிஷன் கண்ட்ரோல் தளத்தில் துவங்குவர். அங்கு 'பர்ஸ்ட் மேன்' தொடர்புடைய பிரத்யோக வீடியோக்கள் காண்பிக்கப்படும். அடுத்ததாக கொலம்பியாவில் உள்ள அவரது அப்போலோ 11 மிஷனின் ஆம்ஸ்ட்ராங் சீட்டிலிருந்து நிலவுக்கு அனுப்பபடுவர். சாட்டர்ன் வி ராக்கெட்டின் சக்தி, விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தல் போன்றவற்றை பார்வையாளர்கள் உணரமுடியும். பின்னர் துரிதமாக வரலாற்றுசிறப்புமிக்க தரையிறங்கும் நிகழ்வை நிலவில் காணமுடியும்.

 தி ஈகுள் விண்கலம்

தி ஈகுள் விண்கலம்

தரையிறங்குவதற்கு முன்பாக தி ஈகுள் விண்கலம் பாறைகள் நிரம்பிய பகுதியை நோக்கி செல்வதை அறிந்த அடுத்த நிமிடம், லூனார் மாடியூலின் தானியங்கி தரையிறங்கும் வசதியை பயன்படுத்த எடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்-ன் வரலாற்று சிறப்புமிக்க முடிவும் இந்த மெய்நிகர் அனுபவத்தில் காண்பிக்கப்படுகிறது."நீங்கள் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கினீர்கள். முதன்முதலாக உங்கள் அனுபவம், ஆம்ஸ்ட்ராங்கின் மன உறுதி, தீர்க்கம் மற்றும் எஃகு நரம்புகள்" என குறிப்பிடுகிறது யுனிவர்சல் பிக்சர்ஸ்.

 ஆஸ்டின் பார்கர்

ஆஸ்டின் பார்கர்

"இப்படிப்பட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் மெய்நிகர்தளத்தில் உண்மையான முன்னோடிகளை கொண்டு வந்தோம் என நினைக்கயில் சிலிர்க்கிறது" என்கிறார் யுனிவர்சல் நிறுவனத்தின் புதுமை படைப்பு பிரிவின் செயல் துணைத்தலைவர் ஆஸ்டின் பார்கர்."இது எங்களுக்கு அற்புதமான மற்றும் வெளிப்படையான என்று இரண்டு வாய்ப்புகள் ஆகும். நம்மில் பெரும்பாலானோர் விண்வெளிவீரராக இருக்க வாய்ப்பில்லாத நிலையில், சில நிமிடங்கள் அந்த அனுபவத்தை தருவதால் இது மனதிற்கு மிகவும் நெருக்கமானது" என மேலும் கூறுகிறார்.

ஜூலை 20

ஜூலை 20

ஜூலை 20, 1969ல் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது, நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என பெயர்பெற்றவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.அவருடன் பஷ் அல்ட்ரின் என்பவரும் நிலவில் தரையிறங்கினார். அவர்களுடன் நிலவுக்கு சென்ற மைக்கேல் கோலின்ஸ் என்பவர் கொலம்பியாவில் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார்.

அதிக உயரத்தில் பறக்கக்கூடிய எக்ஸ்15 பைட்டர் ஜெட் ப்ராஜெக்ட்டின் பைலட் உள்பட பல்வேறு டெஸ்ட் ப்ளைட் அனுபவத்தை கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். 1962ல் இவர் நாசாவின் விண்வெளிவீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் மற்றொரு விண்வெளி பயணமான 1966 ஆம் ஆண்டு ஜெமினி8-ல், ஆம்ஸ்ட்ராங் மற்றும் டேவ் ஸ்காட் இருவரும் கட்டுப்பாட்டை இழந்த விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். 1971ல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் இருந்து இராஜினாமா செய்த நிலையில், 2012 ல் இதய அறுவை சிகிச்சையின் போது இறந்தார்.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் ஹேன்சனால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் அதே 'பர்ஸ்ட் மேன்' என்ற தலைப்புடன் ரெயன் கோஸ்லிங் நடிப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. கடந்த வெள்ளியன்று(அக்டோபர்12) அதிகாரப்பூர்வமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Follow Neil Armstrong to The Moon! New VR Experience Debuts in U.S: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X