Home
News

பட்ஜெட் 2024.. மாத சம்பளம் டபுள்.. EPFO கணக்கு.. ரூ.15000 சம்பள ஊழியர்கள்.. ரூ.1 லட்சம் அதிகபட்சம்.. இனி குஷி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களையும் தட்டித்தூக்கும்படி டபுள் சம்பளம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதல் மாத சம்பளம் வாங்கும்போது, நிறுவனத்தின் சம்பளம் மட்டுமல்லாமல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு - ஈபிஎப்ஓ (Employees Provident Fund Organisation - EPFO) மூலம் ஒரு மாத சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாத சம்பளத்துக்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், ரூ.15000 முதல் சம்பளம் வாங்கும் ஊழியர்களை ஒரேவொரு அறிவிப்பு படு குஷிப்படுத்தி இருக்கிறது.

பட்ஜெட் 2024.. மாத சம்பளம் டபுள்! EPFO கணக்கு.. ரூ.15000 சம்பள ஊழியர்!

2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் (Budget 2024-25) நடுத்தர மக்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஈபிஎப்ஓ திட்டங்களின் (EPFO Schemes) கீழ் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் (One Month Salary For Employees) வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு வரும் முதல் மாத சம்பளம் இரட்டிப்பாக (Double Salary) கிடைக்க இருக்கிறது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் முதல் முறையாக பதிவு செய்து, முதல் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக அவர்களது ஈபிஎப்ஓ அக்கவுண்ட்டுக்கு (EPFO Account) அனுப்பி வைக்கப்படும். இந்த தொகையானது 3 தவணைகளாக ஊழியர்களின் அக்கவுண்டுக்கு வந்து சேரும்.

ரூ.15000 சம்பளம் வாங்கும் ஊழியர்கள் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வரையில் இந்த ஈபிஎப்ஓ திட்டத்தின் கீழ் பலன் பெறலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்த திட்டத்தின் கீழ் 210 லட்சம் இளம் ஊழியர்கள் பயன்பெற இருக்கிறார்கள். படிப்பு முடித்து வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு இது நல்ல ஊக்கமாக இருக்கும்.

முன்னதாக செல்போன்கள், உதிரி பாகங்கள், சார்ஜர்களுக்கான சுங்க வரியானது (Customs Duty) 15 சதவீதமாக குறைக்கப்படும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தார். இந்த சுங்க வரியானது 20 சதவீதமாக இருந்தது. இப்போது, குறைய இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் விலை குறைய இருக்கிறது.

ஆகவே, ஸ்மார்ட்போன் தொடர்பான மார்கெட்டின் வளர்ச்சி அதிகரிக்க இருக்கிறது. மலிவு விலை போன்களில் ரூ.1000 வரையிலும் மிட்-ரேஞ்ச் போன்களில் ரூ.2000 முதல் ரூ.3000 வரையிலும், பிரீமியம் போன்களில் ரூ.5000 வரையிலும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜர்களின் இருப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் செல்போன் இறக்குமதியும் அதிகரிக்கலாம். அதுதொடர்பான தொழில்களிலும் வளர்ச்சியடை வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. மொத்தம் 19 அமர்வுகள் நடக்கின்றன. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
FM Nirmala Sitharaman Announces One Month Salary To EPFO Registered First Time Employees Budget 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X