Home
News

வானத்தில் கார் ஓட்ட போகும் முதல் உலக நாடு இது தான்.! இனி மேலயும் ட்ராபிக் அதிகரிக்க போகுது.!

உலக மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகைக்கு இணையான வாகன நெரிசலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பூமியில் அதிகரித்து கொண்டே போகிறது. தரை வழி போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்து வான் வழி நெரிசலும் அதிகரிக்கப் போகிறது.

ஆம், காரணம் இன்னும் 3 ஆண்டுகளில் வான் வழி பறந்து பயணிக்கும் பறக்கும் டாக்ஸிகளின் (Flying Taxi) எண்ணிக்கையும் அதிகரிக்கப் போகிறது. இன்னும் புரியும் படி, எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மிக விரைவில் உலகத்தில் பறக்கும் கார் டாக்ஸிகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளதாம். இனி உங்கள் தலைக்கு மேல், மக்கள் பறக்கும் ஏர் டாக்ஸிகளில் (Flying Air Taxi) பயணிக்கப் போகிறார்கள். சரி, இது பற்றிய கூடுதல் தகவலைப் பார்க்கலாம்.

வானத்தில் கார் ஓட்ட போகும் முதல் உலக நாடு இது தான்.!

மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகும் முதல் பறக்கும் டாக்ஸி அனுபவம்.!

இந்த பறக்கும் டாக்ஸிகள் எங்கு முதலில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது தெரியுமா? பறக்கும் டாக்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பைக் கொண்ட உலகின் முதல் நகரமாகத் துபாய் (Dubai) மாறும் என்று கூறப்படுகிறது. மிகவும் வளமான நாடு என்றால், அது துபாய் தான். இங்கு தான் மனிதக்குலத்தின் முதல் பறக்கும் டாக்ஸி சேவை (Flying Taxi Took Off in Dubai) துவங்கப்படப் போகிறதாம். இது எப்போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்ற தகவலும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உலகின் முதல் பறக்கும் டாக்ஸி சேவை துபாய் இல் வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் இவை பறக்கத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் தலைவரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) உருவாக்கப்பட்டு வரும் வான் டாக்ஸி துறைமுகங்களுக்கான நிலையங்களின் மாதிரிகளைச் சமீபத்தில் அங்கீகரித்தார்.

வானத்தில் கார் ஓட்ட போகும் முதல் உலக நாடு இது தான்.!

பறக்கும் கார்களுக்காக உருவாக்கப்பட்ட வெர்டிபோர்ட்கள் என்றால் என்ன?

வெர்டிபோர்ட்கள் (Vertiports) என்று அழைக்கப்படும் இந்த பறக்கும் டாக்ஸி நிலையங்களின் முதல் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பதிவுகள் துபாயில் திட்டமிடப்பட்ட வெர்டிபோர்ட்களைக் காட்டுகின்றன. இவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகரத்தைச் சுற்றி வரத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. துபாய் நகரத்தில் இருக்கும் போக்குவரத்து நெட்வொர்க்குகளுடன் பறக்கும் டாக்ஸி அமைப்பை ஒருங்கிணைத்து, துபாய் முழுவதும் இயக்கத்தை மேம்படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெர்டிபோர்ட்களின் பைலட் நெட்வொர்க் துபாயின் நான்கு முக்கிய பகுதிகளான டவுன்டவுன் துபாய் (Downtown Dubai), துபாய் மெரினா (Dubai Marina), துபாய் சர்வதேச விமான நிலையம் (Dubai International Airport) மற்றும் பாம் ஜுமேரா (Palm Jumeirah) பகுதிகளை இணைக்கவுள்ளது. ஒவ்வொரு வெர்டிபோர்ட்டிலும் டேக்-ஆஃப் (Take Off) மற்றும் லேண்டிங் (Landing) தளங்களுடன் வருகிறது. பயணிகள் காத்திருக்கும் பகுதி, பாதுகாப்பு நெறிமுறைகள் (security protocols) மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் (electric charging stations) போன்றவையும் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

வானத்தில் கார் ஓட்ட போகும் முதல் உலக நாடு இது தான்.!

முதல் பறக்கும் கார் டாக்ஸி எங்கிருந்து எங்கு வரை பறக்கவிடப்படும்?

முதல் வான் வழி டாக்ஸி (Flying sky taxi) வெர்டிபோர்ட் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைக்கப்படும். வெர்டிபோர்ட் இரண்டு நிலை கார் பார்க்கிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. டாக்ஸி நிலையம் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பாலம் வழியாக எமிரேட்ஸ் மெட்ரோ (Emirates Metro Station) நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பறக்கும் டாக்சிகள் செங்குத்தாகப் புறப்பட்டுத் தரையிறங்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மின்சாரத்தால் இயக்கப்படும் (Electric vehicle) என்பதனால், இதன் மூலம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த மாசுபாடும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flying Taxi Took Off in Dubai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X