பறந்து சென்று இலக்கை தாக்கும் புதிய எந்திர துப்பாக்கி!

Posted By: Staff
பறந்து சென்று இலக்கை தாக்கும் புதிய எந்திர துப்பாக்கி!

டேப்லட் மூலம் கட்டுப்படுத்தும் புதிய பறக்கும் எந்திர துப்பாக்கி ஒன்றை தயாரித்து, அதன் செயல் விளக்க வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

ஹெலிக்காப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேஷம் மணிக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் இந்த குவேட்ரேட்டர் பாய்ந்து செல்லும்.

அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும். இதனால் மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கேமரா உதவும்.

இந்த எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சமே, இதை டேப்லட் மூலம் இயக்க முடியும் என்பது தான். இதனால் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.  அற்புதமான இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியின் இயக்கத்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் மூலம் பார்க்கலாம்.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்