Home
News

பூ விற்கும் ஏழை தாய்.. வெட்கமே இல்லாமல் கைநிறைய பணம்.. அடம்பிடித்து iPhone வாங்கிய மகன்.. நீங்க என்ன செய்வீங்க

வட இந்தியாவில், கோவில் வாசலில் தினசரி பூ கட்டி விற்பனை செய்து, தனது குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வரும் ஏழை தாயிடம், ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) வாங்கி தரும் படி, கேட்டு அடம்பிடித்து 3 நாட்களாக நீர் மற்றும் உணவு அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு, இறுதியில் தாயை கடனாளி ஆக்கி, வெட்கமே இல்லாமல் ஐபோன் வாங்கிய மகனை பற்றிய வீடியோ பதிவில், உலக நெட்டிசன்ஸ்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேவலமாக கழுவி ஊற்றி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் காஸ்ட்லீ போன் என்றாலே அது ஐபோன் என்று தான் எல்லோரும் கூறுவார்கள். அது மறுக்க முடியாத உண்மையும் கூட. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ. 6000 முதல் நம்மால் வாங்க கிடைத்தாலும். ஐபோன்களின் ஆரம்ப விலை இந்தியாவை பொறுத்த வரையில் ரூ. 60,000-திற்கு மேல் தான் துவங்குகிறது. இத்தகைய காஸ்ட்லீ ஸ்மார்ட்போனை பூவிற்கும் ஏழை தாயிடம் அடம்பிடித்த வாங்கி இருக்கிறார் அவரது மகன்.

பூ விற்கும் ஏழை தாய்.. கைநிறைய பணம்.. அடம்பிடித்து iPhone வாங்கிய மகன்

பூ விற்கும் ஏழை தாயிடம் அடம்பிடித்து ஐபோன் வாங்கிய மகன்:

வட இந்தியாவில், கோவில் வாசலில் தினசரி பூ கட்டி விற்பனை செய்து, தனது குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் ஏழை தாய் ஒருவர். இவருக்கு டீனேஜ் வயது மகன் ஒருவரும் இருக்கிறார். தினசரி பூ விற்று, அதில் வரும் காசில் தான் குடும்பத்தை சிக்கனத்துடன் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் அந்த ஏழை தாய்.

அந்த தாயிடம் தனக்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கி தரும் படி கேட்டு அடம்பிடித்திருக்கிறான் அவரது மகன். ஐபோனின் விலையை கூட அறிந்திடாத அந்த வெகுளி தாய் முதலில் சரி கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு வாங்கலாம் என்று கூறி, புது போன் வாங்க எவ்வளவு பணம் உனக்கு தேவைப்படுகிறது என்ற கேள்வியை தனது மகனிடம் எழுப்பியிருக்கிறார். மகனோ, தனக்கு ரூ. 80,000 முதல் ரூ. 85,000 வரை தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ந்து போன தாய், என்னது ஒரு போனுக்கு ஏறக்குறைய 1 லட்சம் செலவு செய்வதா, என்னால் எல்லாம் அதை வாங்கி தர முடியாது என்று கடினமாக திட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார். மறுப்பு தெரிவித்த தாயிடம் மகன் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிவிட்டான். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நீர் மற்றும் ஆகாரம் எதுவும் உண்ணாமல், ஐபோன் கேட்டு அழுது அடம்பிடித்திருக்கிறான் அவரது மகன்.

ரூ.80,000 கடன் வாங்கி ஐபோன் வாங்குவது அவசியமா? கோவத்தை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்:

எவ்வளவு எடுத்து கூறியும் புரிந்துகொள்ள முடியாத மகனிடம் இனி பேசி வேளைக்கு ஆகாது என்று உணர்ந்த தாய், தனது மனதை கல்லாக்கிக்கொண்டு, தன்னை சுற்றி இருக்கும் எல்லாரிடமும் சிறிய சிறிய தொகையாக கடன் வாங்கி, கையில் 80,000 ரூபாய் ரொக்க பணத்துடன் வந்துவிட்டார். உடனே அவரது மகன் அந்த பணத்தை வெட்கமே இல்லாமல் பெற்றுக்கொண்டு ஐபோன் வாங்க சென்றுவிட்டார்.

கடையில் ஐபோன் 15 மாடலை அவர் வாங்கும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாயிடம் அடம்பிடித்து, உண்ணாவிரதம் இருந்து இந்த போனை வாங்க வந்துள்ளதாக அந்த வீடியோவில் கடைக்காரரிடம் ஏழை தையின் மகன் கூறுவது பதிவாகியுள்ளது. 'ஐபோன் லவ்வரின் பவர் இது தான்' என்று கூறி அவர் கையில் போனை வழங்கிய நபரையும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

குடும்பத்தின் நிலை, தாயின் மனநிலை என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடம்பிடித்து ஐபோன் வாங்கிய மகனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி ஒரு மகன் தேவையா என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். உங்களுக்கு இப்படி ஒரு மகன் இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் கேள்விகள் எழும்பி, இந்த வீடியோ ஒரு வாதாட்ட காலமாக மாறியுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flower seller mom forced to buy iPhone for son as he goes on hunger strike Internet is angry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X