அது தம்பி செய்த வேலை தான்: பில்கேட்ஸ்,ஒபாமா உள்பட 45பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்.!

|

பல்வேறு பிரபலங்கள் முதல் சிறுவர்கள் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த வலைதளங்கள் வேலைவாய்ப்பு, கல்வி,போன்ற பல்வேறு தேவைகளுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

மிகவும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ

அன்மையில் மிகவும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிட்காயின் தொடர்பான செய்திகள்வெளியானதால் உலகம் முழுவதும் அதிக பரபரப்பு ஏற்பட்டது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் நீண்ட நேர

அதன்பின்னர் தான் பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது எனத் தெரியவந்தது, மேலும் நீண்ட நேர போரட்டத்திற்கு பின்னர் பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

பிஎஸ்என்எல் சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.147 திட்டத்தில் இனி மொத்தமும் இருக்கு., எல்லாம் எக்ஸ்டரா!

 ரஷ்யா அல்லது சீனாவால்

இந்த ஹேக்கிங் ரஷ்யா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது, பின்பு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காயின் தொடர்பான தகவல்களை வெளியிட்டது, 3பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.

பப்ஜியை விட்டுட்டு படிப்ப பாருப்பா: கண்டித்த தந்தை-துப்பாக்கியை எடுத்த மகன்.,என்ன நடந்தது தெரியுமா?

 நபரான 17வயது நிரம்பிய சிறுவன் தான்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல்(22) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹேப்பர்டு (19) ஆகிய இருவரும் ட்விட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்றாவது நபரான 17வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளான் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 கிளார் என்ற பெயருடைய

குறிப்பாக கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் பண்ணாதிங்க: போகோ எம் 2 ப்ரோ அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!

தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு இவர்கள்

மேலும் ட்விட்டர் ஹேக்கிங்கில் கிலார் குறைந்தது 1லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்ய காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Florida 17-Year-Old, 'Mastermind' Of Twitter Hack, And Two Others Face Charges: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X