ரூ.43,990க்கு விற்ற 43 இன்ச் Smart TV ரூ.14,490 மட்டுமே: இயர் எண்ட் தள்ளுபடினா இப்படி இருக்கனும்!

|

ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு Smart TV என்பது பிரதானமாகி விட்டது. ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகமாகி வருகிறது. இதற்கு மத்தியில் ஸ்மார்ட்டிவிகளுக்கு ஆன்லைன் தளங்கள் தள்ளுபடிகள் அறிவித்து அதை இன்னும் மலிவு விலைகளாக மாற்றுகிறது. அதன்படியான ஒரு தள்ளுபடி விவரத்தை தான் பார்க்கப்போகிறோம்.

Flipkart Year End Sale

Flipkart Year End Sale

புது ஸ்மார்ட்டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். 2022 முடிவடைய இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆன்லைன் போர்ட்டல்களும் இயர் எண்ட் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட்டில் Flipkart Year End Sale விற்பனையில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடி குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.

InnoQ Frameless 43 inch Smart TV

InnoQ Frameless 43 inch Smart TV

InnoQ Frameless 43 inch Smart TV ஆனது ரூ.43,990 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.14,490 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 67 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்டிவி இன் பெயரை நீங்கள் இப்போது தான் முதலில் கேள்விப்படுகிறீர்கள் என்றால் இதன் மேலோட்ட அம்சங்களை பார்க்கலாம்.

InnoQ Frameless ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

InnoQ Frameless ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

InnoQ Frameless ஸ்மார்ட்டிவி ஆனது 43 இன்ச் அளவில் கிடைக்கிறது. பேர் குறிப்பிடுவது போல் இது ஃப்ரேம் லெஸ் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. சுவரில் மாட்டினால் பெசல்கள் எதுவும் தெரியாமல் சுவரில் ஒட்டி வைத்தது போல் இருக்கும். நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என பல ஓடிடி தள ஆதரவுகளை வழங்குகிறது. இது பக்கா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி ஆகும். 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி.

TOSHIBA C350LP 43 inch Ultra HD Smart TV

TOSHIBA C350LP 43 inch Ultra HD Smart TV

TOSHIBA C350LP 43 inch ஸ்மார்ட்டிவி ஆனது அல்ட்ரா எச்டி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.34,990 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.27,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 20 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

43 இன்ச் அளவு டிஸ்ப்ளே

43 இன்ச் அளவு டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 43 இன்ச் அளவு டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இது கூகுள் டிவி ஆகும். இது டால்பி விஷன் அட்மாஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் ஜீ5 உள்ளிட்ட ஓடிடி அணுகல் ஆதரவு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

Mi 5A Smart Android TV

Mi 5A Smart Android TV

Mi 5A Smart Android TV ஆனது பெயர் குறிப்பிடுவது போல் பக்கா ஆண்ட்ராய்டு டிவி ஆகும். இந்த டிவியானது ரூ.24,999க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 44 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Mi 5A அம்சங்கள்

Mi 5A அம்சங்கள்

Mi 5A Smart Android TV ஆனது எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதில் டால்பி ஆடியோ ஆதரவுகள் இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஆண்ட்ராய்டு டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

Infinix Y1 Smart Linux TV

Infinix Y1 Smart Linux TV

Infinix Y1 Smart Linux TV ஆனது ரூ.16,999 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதி விலைக்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவி பிளிப்கார்ட்டில் 47 சதவீத தள்ளுபடியுடன் ரூ.8999 என கிடைக்கிறது.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஓடிடி அணுகல் இதில் கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் மூலம் இது இயங்குகிறது. 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பேனல் ஆதரவு இதில் இருக்கிறது. 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி.

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale: Rs.43,990 Smart TV Available at Rs.14,490., Right time to Buy 43 inch smart TV

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X