இது சாம்சங் நேரம்: புத்தாண்டை முன்னிட்டு பிளிப்கார்டின் அதிரடி டிஸ்கவுன்ட்

|

ஆண்டு இறுதி விற்பனை பிளிப்கார்ட் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் தளங்களிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு பெரிய தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பை குறித்து பார்க்கலாம்.

சாம்சங் ஸ்மார்ட் போன்கள்

சாம்சங் ஸ்மார்ட் போன்கள்

சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது பிளிப்கார்டில் பல்வேறு சலுகைகளுடன் வாங்கலாம். டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வழங்கும் கூடுதல் சலுகைகள்

பிளிப்கார்ட் வழங்கும் கூடுதல் சலுகைகள்

இந்த தொலைபேசிகளை வாங்க உங்களைத் தூண்டும் பிளிப்கார்ட்டின் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் அச்சு வங்கி கடன் அட்டையில் 5% வரம்பற்ற கேஷ்பேக், ஐசிஐசிஐ வங்கி கடன் மற்றும் டெபிட் கார்டுகளுடன் இஎம்ஐ மீது 5% உடனடி தள்ளுபடி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுடன் கூடுதல் 5% தள்ளுபடி, பரிமாற்ற சலுகைகள் , கேஷ்பேக் சலுகைகள் மற்றும் உத்தரவாத சேவைகள் கிடைக்கின்றன. அதுதவிர, பிளிப்கார்ட் முழுவதும் ஏதேனும் சாம்சங் தொலைபேசியை வாங்கினால், அதற்கு 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9

சாம்சங் கேலக்ஸி எஸ் 9

இந்த போனின் விலையானது ரூ. 32,501. இதன் விலை ரூ. 52% தள்ளுபடியுடன் ரூ. 29,999 கிடைக்கிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் ரூ. 11,850 பெறுகிறது.

சும்மா கிழி: வோடபோன் ரூ.24 திட்டம் அறிமுகம்- மேலும் 3 புதிய திட்டங்கள் அறிவிப்புசும்மா கிழி: வோடபோன் ரூ.24 திட்டம் அறிமுகம்- மேலும் 3 புதிய திட்டங்கள் அறிவிப்பு

சாம்சங் கேலக்ஸி எம் 10 எஸ்

சாம்சங் கேலக்ஸி எம் 10 எஸ்

இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,385 விற்கப்படுகிறது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. மெட்டாலிக் ப்ளூ மற்றும் எஃகு கருப்பு வண்ண விருப்பங்களில் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இஎம்ஐ வசதி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது, இதில் ரூ.442 வழங்கி வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 பிளஸ்

மொபைல் போன் ரூ. 37,999 விற்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இது பர்கண்டி ரெட், கோரல் ப்ளூ, லிலாக் பர்பில் மற்றும் மிட்நைட் பிளாக் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் முக்கிய விவரக்குறிப்புகள் 12MP + 12MP பின்புற கேமரா அமைப்பு, 8MP செல்பி சென்சார், 3,500mAh பேட்டரி வசதியுடன் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 50

சாம்சங் கேலக்ஸி ஏ 50

இந்த போனானது ரூ.11,850-க்கு விற்கப்படுகிறது. மேலும் மாதம் ரூ.1,417 இஎம்ஐ செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இது நிலையான EMI விருப்பங்களின் அடிப்படையில் கூட வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் கூட இந்த மொபைல்களை வாங்கலாம்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ Y11 ஸ்மார்ட்போன்.!5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ Y11 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ 70 எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ 70 எஸ்

இந்த போனானது ரூ.14,350-க்கு விற்கப்படுகிறது. இதை ரூ.4,834 செலுத்தி இஎம்ஐ விருப்ப வசதியுடன் வாங்கலாம். மேலும் பல்வேறு சலுகைகளுடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 80

சாம்சங் கேலக்ஸி ஏ 80

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,010-க்கு விற்கப்படுகிறது. மேலும் வாரண்டி என்று பார்க்கும் இந்த வகை ஸ்மார்ட் போனுக்கு 1 வருடம் வாரண்டி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்:

சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்:

இந்த ஸ்மார்ட் போனானது ரூ.13,850-க்கு விற்கப்படுகிறது. இந்த போனானது ரூ.3,334 இஎம்ஐ வசதி கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சலுகைகளுடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுடன் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 30

சாம்சங் கேலக்ஸி ஏ 30

சாம்சங் கேலக்ஸி ஏ 30 போனானது ரூ.11,850-க்கு விற்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இந்த போனானது ரூ.13,990-க்கு விற்கப்பட்டு வந்தது. இதில் மாத இஎம்ஐ வசதியாக ரூ.1,166-க்கு செலுத்தி பெறலாம்.

 சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

ஸ்மார்ட்போனானது ரூ.79,999-க்கு விற்கப்பட்டு வந்தது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இது ஆரா பிளாக், ஆரா க்ளோ மற்றும் ஆரா வைட் கலர் விருப்பங்களில் வருகிறது. மேலும் இது இஎம்ஐ வசதியானது ரூ.8,889 செலுத்தி இந்த போனை வாங்கலாம்.

இது என்ன புது சோதனை: அடுத்த 1 வருடத்திற்கு கட்டண வசூல் தொடரும்- ஜியோஇது என்ன புது சோதனை: அடுத்த 1 வருடத்திற்கு கட்டண வசூல் தொடரும்- ஜியோ

சாம்சங் கேலக்ஸி நோட் 10

சாம்சங் கேலக்ஸி நோட் 10

இந்த போனானது ரூ.69,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் இதற்கு ரூ.11,850 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனின் விலையானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இந்த போனை ரூ.7,778 இஎம்ஐ செலுத்தி சாம்சங் கேலக்ஸி நோட் 10 போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 40

சாம்சங் கேலக்ஸி எம் 40

இந்த ஸ்மார்ட் போனானது ரூ.19,999-க்கு விற்கப்படுகிறது. இந்த போனுக்கு பல்வேறு சலுகைகளுடன் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் விற்கப்படுகிறது. இது மிட்நைட் ப்ளூ, கடல்நீள வண்ணம் வகையில் கிடைக்கிறது. இந்த போனானது 32 எம்பி ரியர் கேமரா மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale On Samsung Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X