Home
News

சைலன்ட்-ஆ Year End Sale-ஐ ஆரம்பிச்ச Flipkart! iPhone 14 முதல் Samsung S22 வரை பல போன்கள் மீது முரட்டு Offers!

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்கான தனது கடைசி சிறப்பு விற்பனையை அறிவித்த்துள்ளது. இயர் எண்ட் சேல் (Year End Sale) என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனை எப்போது தொடங்கி, எப்போது முடியும்? இதன்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆஃபர் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

2023 பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் எப்போது தொடங்கி.. எப்போது முடியும்? இது நாளை முதல் (அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி முதல்) தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி வரை தொடரும். மற்ற சிறப்பு விற்பனைகளை போலவே இதிலுள்ள பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) மெம்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

Year End Sale-ஐ ஆரம்பிச்ச Flipkart.. பல போன்கள் மீது முரட்டு Offers!

அதாவது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்ஷிப்பை கொண்டவர்கள் ஒரு நாள் முன்னதாகவே இயர் எண்ட் சேல் டீல்கள் மற்றும் ஆஃபர்களை (Deals and Offers) அணுக முடியும், அதாவது டிசம்பர் 8 ஆம் தேதியே அவர்களுக்கான பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் விற்பனை தொடங்கும் என்று அர்த்தம்.

2023 பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்-ன் கீழ் என்னென்ன ஆஃபர் கிடைக்கும்? பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஆப்பிள், கூகுள், சாம்சங், நத்திங், ரியல்மி, மோட்டோரோலா, விவோ உட்பட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Year End Sale-ஐ ஆரம்பிச்ச Flipkart.. பல போன்கள் மீது முரட்டு Offers!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ரூ. 40,000 க்குள் வாங்க இருக்கும் என்று பிளிப்கார்ட்டின் டீஸர் பரிந்துரைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங்கின் இந்த ஃபிளாக்ஷிப் போன் தற்போது ரூ.49,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த மாடலின் மீது ரூ.10,000 ஆஃபர் கிடைக்கும் என்பது போல் தெரிகிறது.

எஸ் சீரிஸின் கீழ் கடைசியாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Samsung Galaxy S23 Series) மீதும் சலுகைகள் கிடைக்கலாம், ஏனென்றால் கூடிய விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) உலகளவில் (ஜனவரி 2024) அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Year End Sale-ஐ ஆரம்பிச்ச Flipkart.. பல போன்கள் மீது முரட்டு Offers!

ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.60,999 க்கு பதிலாக ரூ.55,000 க்கு வாங்க கிடைக்கும். இதேபோன்ற சலுகை ஐபோன் 15 மீதும் இருக்குமா என்பது தற்போது தெரியவில்லை. இப்போது கிடைக்காவிட்டாலும் கூட எஸ்24 சீரீஸ் அறிமுகமான பின்னர் (அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து) ஐபோன் 15 சீரிஸ் மீது நல்ல தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்; இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வழக்கமாக நடக்கும் விஷயமாகும்.

இதேபோல மோட்டோரோலாவின் எட்ஜ் 40 (Motorola Edge 40) ரூ.25,499க்கும், இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ (Infinix Hot 30i) ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு பதிலாக ரூ.7,149க்கும் வாங்க கிடைக்கும். நத்திங் போன் 2 ஆரம்ப விலை ரூ.34,999 ஆக குறையும் (வங்கி சலுகைகள் உட்பட). நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 மீது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பிற்கு பின்னர் இதன் ஆரம்ப விலை ரூ.39,999 ஆக மாறியது.

Year End Sale-ஐ ஆரம்பிச்ச Flipkart.. பல போன்கள் மீது முரட்டு Offers!

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களை தவிர்த்து கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7), ரியல்மி சி53 (Realme C53), சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி (Samsung Galaxy F14 5G), போக்கோ சி55 (Poco C55) மற்றும் ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட விலை குறைப்புகளை பெற்றுள்ளன.

ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை தவிர்த்து, பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் ஆனது ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடி, கீசர்கள் மற்றும் ஹீட்டர்களில் 70 சதவீத தள்ளுபடி, எலக்ட்ரானிக்ஸ் மீது 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி, ரூ.9,990 முதல் லேப்டாப்கள் போன்றவைகளையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale From Dec 9 to Dec 16 Smartphone Discounts Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X