Home
News

பிளிப்கார்ட்: மகளிர் தினத்தை முன்னிட்டு டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு 75சதவீதம் விலைகுறைப்பு

மகளிர் தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 43-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை ரூ.20,000-க்குள் வாங்க முடியும் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

பிளிப்கார்ட்: டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு 75சதவீதம் விலைகுறைப்பு

குறிப்பாக மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்ஸ்,  வியூ ஸ்மார்ட் டிவிகள்:

பிலிப்ஸ், வியூ ஸ்மார்ட் டிவிகள்:

இந்த சிறப்பு விற்பனையில் பிலிப்ஸ் வியூ ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு கண்டிப்பாக 75சதவீதம் விலைகுறைப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வியூ 43-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.17,499-விலையில் வாங்க முடியும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்:

மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்:

மகளிர் தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 43-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை ரூ.20,000-க்குள் வாங்க முடியும் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 1வருடம் மற்றும் 3வருடம் உத்தரவாதத்தை கொடுத்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

அசுஸ், சாம்சங், சியோமி, ஒப்போ, விவோ நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் மாடலைகளை, இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் 50சதவீதம் முதல் 75சதவீதம் வரை விலைகுறைப்பில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட், நிறுவனம் கூறியுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

சியோமி, அசுஸ், டெல், ஹெச்பி, நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கும் 75சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வாஷிங் மெசின், கேமரா, டேப்லெட், வீட்டுக்கு உபயோகமாக மின்னணு பொருட்களுக்கும் விலைகுறைக்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

ரூ.8,000-விலையில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி 7.! அம்சங்கள்.!

ரூ.8,000-விலையில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி 7.! அம்சங்கள்.!

சியோமி நிறுவனம் அன்மையில் ரெட்மி நோட் 7 மற்றும், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது, அதை தொடர்ந்து விரைவில் சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரியல்மி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக தான் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரெட்மி 7 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.8,000 என்ற ஆரம்ப விலையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Flipkart Women's Day Sale kicks off on March 7; up to 75% discount on TVs and appliances: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X