பிளிப்கார்டில் விலை உயர்ந்த ஐபோனை ஆர்டர் செய்த நபர்: ஆனால் கிடைத்தது இதுதான்.! வைரல் வீடியோ.!

|

பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்த தளங்களில் சில பொருட்கள் சலுகையுடன் கிடைப்பதால் மக்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது பண்டிகை காலம் என்பதால் அமேசான்,
பிளிப்கார்ட் நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றன.

இரண்டு தளங்களிலும்

அதேபோல் இந்த இந்த இரண்டு தளங்களிலும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப்,டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியம். இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் ஆர்டர் செய்த ஒரு நபர் தனக்கு டெலிவரி செய்த பொருளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பயங்கரமான ஆளா இருக்கியேப்பா- காதில் மைக்ரோசிப் பொருத்தி காவலர் தேர்வு எழுதிய இளைஞர்: சிக்கியது எப்படி?- வீடியோபயங்கரமான ஆளா இருக்கியேப்பா- காதில் மைக்ரோசிப் பொருத்தி காவலர் தேர்வு எழுதிய இளைஞர்: சிக்கியது எப்படி?- வீடியோ

ச் சேர்ந்த சிம்ரன்பால்

சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட ஆஃபர் மூலம்
ஐபோன் ஒன்றை ரூ.51,000-க்கு ஆர்டர் செய்துள்ளார். அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது. எனவே நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கவேண்டும் என்ற கனவை தான் கஷ்டப்பட்டு சேர்ந்த பணம் மூலம் வாங்க நினைத்துள்ளார் சிம்ரன்பால் சிங் .

லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் சேர்த்தே இந்த விலையில் வாங்கலாம்- அமேசான் அதிரடி தள்ளுபடி!லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் சேர்த்தே இந்த விலையில் வாங்கலாம்- அமேசான் அதிரடி தள்ளுபடி!

மேலும் அவர் ஆர்டர் செய்த பார்சலை அண்மையில் பிளிப்கார்ட் டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்துள்ளார். பின்பு தன்னுடைய
கனவு நினைவானதை பார்க்கும் வகையில் சிம்ரன்பால் தான் பார்சலை பிரிப்பதை வீடியோ எடுக்கவும் சொல்லியுள்ளார்.

பெஸ்டான சாம்சங் கேலக்சி எம் சீரிஸ் போன்கள் வாய்ப்பு.. இந்த ஆஃபர்களை செக் பண்ணுங்க மக்களே..பெஸ்டான சாம்சங் கேலக்சி எம் சீரிஸ் போன்கள் வாய்ப்பு.. இந்த ஆஃபர்களை செக் பண்ணுங்க மக்களே..

டெலிவரி பாய் அவர் சொன்னது

எனவே அந்த டெலிவரி பாய் அவர் சொன்னது போல வீடியோ எடுக்கும் போது அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக இரண்டு பெரிய நிர்மா சோப்பு இருந்துள்ளது. இதைப் பார்த்த சிம்ரன்பால் அதிர்ச்சி அடைந்தார். உடனே உஷாரான சிம்ரன்பால் இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார்.

12ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, 65 ஃபாஸ்ட் சார்ஜிங்: ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுகம்- குறைந்த விலை உச்ச அம்சங்கள்!12ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, 65 ஃபாஸ்ட் சார்ஜிங்: ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுகம்- குறைந்த விலை உச்ச அம்சங்கள்!

னுப்பியதாகவும்

அதன்பின்பு சிம்ரன்பாலின் புகாரை ஏற்றுக் கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு சில மணி நேரங்களில் அவர் கொடுத்த பணத்தை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்தது. பின்பு உடனடியாகவும் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

புது ரியல்மி 4K ஸ்மார்ட் டிவி ஸ்டிக், கேமிங் டிரிக்கர் சாதனங்களுக்கு சலுகை.. சிறப்பு விற்பனை எப்போது?புது ரியல்மி 4K ஸ்மார்ட் டிவி ஸ்டிக், கேமிங் டிரிக்கர் சாதனங்களுக்கு சலுகை.. சிறப்பு விற்பனை எப்போது?

.51,000 மதிப்பிலான ஐபோன் 12

அதேபோல் ரூ.51,000 மதிப்பிலான ஐபோன் 12 ஆர்டர் செய்தவருக்கு ரூ.10 மதிப்பிலான சோப்பு வந்த வீடியோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த வீடியோவை பலர் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் அதிக மக்களால் நம்பபடும் ஒரு இ- காமெர்ஸ் நிறுவனம் என்பதால் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன்பு அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

எல்லா கோட்டையும் அழிங்க., முதல்ல இருந்து ஆரம்பிப்போம்- அமேசான் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி!எல்லா கோட்டையும் அழிங்க., முதல்ல இருந்து ஆரம்பிப்போம்- அமேசான் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி!

பிளிப்கார்ட், அமேசான் போன்ற

அதேபோல் இந்த பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, பின்பு அந்த பொருள் வரும் போது அதை வீடியோவாக எடுப்பது மிகவும் நல்லது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதுபோன்ற தளங்களில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart who delivered the soap to the person who ordered the iPhone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X