வால்மார்ட் - பிளிப்கார்ட் ஒப்பந்தம்: அமேசானுக்கு அடி; என்ன நடந்தது.? என்னென்ன நடக்கும்.?

2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாஃப்ட், டென்சென்ட், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தொடந்து தக்கவைத்துக்கொள்ளும்.

|

பிளிப்கார்ட் இந்தியா முழுவதும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக உள்ளது, தற்சமயம் அமெரிக்காவை சார்ந்த ரீடெயில் நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் பிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்-ல் 77 சதவீதம் பங்குகளை சுமார் 16,800 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது, மேலும் இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வால்மார்ட் - பிளிப்கார்ட் ஒப்பந்தம்: அமேசானுக்கு அடி; என்ன நடந்தது.?

பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது, தற்சமயம் அந்நிறுவனம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பென்டொன்வில்இ அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77சதவீதம் பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் அமேசான் நிறுவனத்திற்கு இந்நிறுவனம் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

1. வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்-ல் 77 சதவீதம் பங்குகளை சுமார் 16,800 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது, இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் பிளிப்கார்ட் வால்மார்ட்டுக்கு குறைந்த பங்கைக் கொடுக்கும்; இருப்பினும், இது இ-காமர்ஸ் பிராண்டில் தெளிவான பெரும்பான்மை உரிமையைக் காக்கும்.

2.இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இந்த மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது.

மெக் மில்லன்

மெக் மில்லன்

3.வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர் மெக் மில்லன் தெரிவத்தது என்னவென்றால், இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் சிறந்த வளர்சியை கொண்டுள்ளது, எனவே இந்த இ-காமர்ஸ் துறையில் எங்களின் முதலீடு மிகச்சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

4.பிளிப்கார்ட் போர்ட்டின் பகுதியாக இருக்கும் வால்மார்ட் , பிளிப்கார்ட் வேண்டி உறுப்பினர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனம் ஒன்று முதன்முதலில் பெரிய செலவில் இந்திய நிறுவனத்தை வாங்கியுள்ளது இதுவே முதன்முறை.

மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட்

5. பிளிப்கார்ட் தளத்தில் சாஃப்ட்பேங்க் நிறுவனம் தற்சமயம் 20சதவீதம் பங்குகளை கொண்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது.

6. 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாஃப்ட், டென்சென்ட், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தொடந்து தக்கவைத்துக்கொள்ளும்.

வால்மார்ட்

வால்மார்ட்

7.இந்தியாவில் தற்சமயம் சுமார் 10கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம், இந்நிறுவனத்தை ஏற்கனவே அமேசான்
நிறுவனம் வாங்க முயற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

8.ஏற்கனவே இந்தியாவில் கால்பதிக்க முனைந்து வந்த வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளால், கைவசம் நிறைய பணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஆக்செல் பார்ட்னர்ஸ்

ஆக்செல் பார்ட்னர்ஸ்

9.வால்மார்ட் வாங்கும் பட்சத்தில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்க டைகர் குளோபல், ஆக்செல் பார்ட்னர்ஸ் மற்றும் நாஸ்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

10.தற்சமயம் பிளிப்கார்ட் வாங்கும் முயற்சியில் வால்மார்ட் வெற்றிபெற்றுள்ளது, எனவே இந்திய ஆன்லைன் சந்தையில் மிகப்பெரிய
மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Walmart Deal Explained in 10 Points ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X