Home
News

Flipkart விற்பனையில் 1 ரூபாய் செலுத்தி எப்படி பொருட்களை தக்கவைத்து வாங்குவது?

Flipkart பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. பண்டிகை காலத்திற்கு முன்பாக இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை நிகழ்வதால், டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இதனால் சில பொருட்களை விற்பனை நாட்களின் போது வாடிக்கையாளர்கள் வாங்க முடியலாம் போகிறது. இதனைச் சரி செய்யும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் 1 ரூபாய் செலவு

வெறும் 1 ரூபாய் செலவு

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளை விற்பனை நாளில் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள புதிய முன்பதிவு முறையை பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் வெறும் 1 ரூபாய் செலவு செய்து முன்பதிவு செய்தால் போதும், அந்த பொருள் விற்பனை நாளில் வாங்க கிடைக்கும்படி Flipkart நிறுவனம் அதை தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Flipkart முன்பதிவு முறை

புதிய Flipkart முன்பதிவு முறை

அக்டோபர் 11 முதல், உங்களுக்கு பிடித்த தயாரிப்பு பொருட்களை நீங்கள் Flipkart பயன்பாடு அல்லது வெப்சைட் வழியில் ரூ.1 செலவு செய்து முன்பதிவு செய்யலாம். பொருட்களை முன்பதிவு செய்வதன் மூலம், அவற்றை நீங்கள் விற்பனை நாளில் வாங்கச் செல்லும்போது நிச்சயம் உங்களுக்கு அந்த பொருள் கிடைப்பதை நிறுவனம் உறுதிசெய்கிறது.

முன்பதிவு செய்யும் நாட்களின் விபரம்

முன்பதிவு செய்யும் நாட்களின் விபரம்

Flipkart நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் 16 முதல் தொடங்கி அக்டோபர் 21 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான முன்பதிவு சலுகை அக்டோபர் 11 முதல் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், உங்களுக்கு பிடித்த பொருட்களை நீங்கள் அக்டோபர் 14 ஆம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. அதன்பின் முன்பதிவு காலம் முடிவடையும்.

விற்பனை நாளில் இதை மட்டும் செய்தால் போதும்

விற்பனை நாளில் இதை மட்டும் செய்தால் போதும்

இந்த முன்பதிவு காலத்தில் நீங்கள் விரும்பிய பொருட்களை முன்பதிவு செய்துவிட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கும் நாட்களின் போது, நீங்கள் தயாரிப்பு பக்கத்திற்குச் சென்று அதற்கான முழுத் தொகையையும் செலுத்திவிட்டு டெலிவரிக்காக மட்டும் காத்திருக்க வேண்டும். தயாரிப்பை முன்பதிவு செய்வதன் மூலம், உங்களுக்கு அந்த பொருள் நிச்சயம் வாங்க கிடைக்கும் என்பதைத் திட்டமிடலாம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, முன்பதிவு சலுகை குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சில தயாரிப்புகளில் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. முன்பதிவு சலுகைக்கு தகுதியான தயாரிப்புகள் மேல் ஒரு ஊதா நிற முன்பதிவு புக்கிங் சின்னத்தைக் கொண்டிருக்கும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து பொருட்களின் மேல் Flipkart முன்பதிவு சலுகை கிடைக்காது.

இதை செய்யாவிட்டால் ஆர்டர் ரத்து

இதை செய்யாவிட்டால் ஆர்டர் ரத்து

நீங்கள் முன்பதிவு செய்த பொருட்களை ரத்து செய்தால், முன்பதிவு செய்வதற்கு நீங்கள் செலவு செய்த 1 ரூபாய் கட்டணம் மீண்டும் திருப்பித் தரப்படும். முன்பதிவு செய்த பிறகு, பொருளுக்கான மீதமுள்ள கட்டணத்தை முழுமையாக அக்டோபர் 16ம் தேதி இரவு 11:59 மணிக்கு முன்பாக நீங்கள் செலுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் முன்பதிவு செய்த ஆர்டர் ரத்து செய்யப்படும் என்று Flipkart தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு எந்தவொரு வங்கி சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என்று Flipkart தெரிவித்துள்ளது. அக்டோபர் 11 முதல் 14 வரை முன்கூட்டியே முன்பதிவு செய்யாமல் விற்பனை நாளில் ஆர்டர் செய்தால் மட்டுமே அந்த தயாரிப்பு மீதான வங்கி சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Flipkart To Allow Pre-Booking a Product For Just Rs 1 During Big Billion Days Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X