Subscribe to Gizbot

ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

Written By:

அமேசான் கிரேட் இந்திய சேல் விற்பனையை அறிவித்தபின் இப்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை மூலம் மின்னணு பொருட்கள், ஃபேஷன் , பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஃபிளிப்கார்ட் சலுகை வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையுடன் அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வந்த கார்பன் டைட்டானியம் ஜம்போ, ஸ்மார்ட்ரான் டி.ஃபோன் பி, பானாசோனிக் பி99, ஹானர் 9 லைட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைபப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு 48,999-விலையில் கிடைக்கும், அதன்பின்பு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோன்று கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,000-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது. அதேபோன்று விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவா கே8 பிளஸ்:

லெனோவா கே8 பிளஸ்:

லெனோவா கே8 பிளஸ் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.41,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.35,900-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் இஎம்ஐ வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும், அதன்படி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்3:

ஓப்போ எப்3:

ஓப்போ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும், அதேபோன்று ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Flipkart The Republic Day Sale Top deals on Google Pixel 2 XL Vivo Lenovo Motorola and more ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot