பெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..

|

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் சேல்ஸ் விற்பனையை நிறுவனம் தனது இ-காமர்ஸ் தளத்தில் இன்று முதல் துவங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கார்னிவல் விற்பனையில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் சில சலுகைகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் சேல்ஸ் விற்பனை

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் சேல்ஸ் விற்பனை

ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ்ஆர், ரியல்மி சி 12, போக்கோ சி 3, மற்றும் ரியல்மி நர்சோ 30 ஏ போன்ற ஸ்மார்ட்போன்கள் விலைக் குறைப்புகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு சேர்ந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 1,250 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, ஸ்மார்ட்போன்கள் கட்டணமில்லாத ஈ.எம்.ஐ விருப்பங்கள், முழுமையான மொபைல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் போன்கள் மீது அபார சலுகை

ஆப்பிள் போன்கள் மீது அபார சலுகை

இந்த, Flipkart ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில், ஐபோன் எஸ்இ (2020) சாதனம் ரூ. 29,999 என்ற விலையில் அதன் அடிப்படை 64 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது. அதேபோல் இதன் 128 ஜிபி மாடல் வெறும் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதேபோல், ஐபோன் எக்ஸ்ஆர் போனின் 64 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி மாடல் ரூ. 43,999 விலையில் கிடைக்கிறது.

395 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் நன்மை கிடைக்கும் ஒரே BSNL திட்டம்.. விலை இது தான்..395 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் நன்மை கிடைக்கும் ஒரே BSNL திட்டம்.. விலை இது தான்..

சாம்சங் கேலக்ஸி S20 FE மீது சலுகை

சாம்சங் கேலக்ஸி S20 FE மீது சலுகை

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 5,000 தள்ளுபடி பெற்று, இப்போது ரூ. 44,999 என்ற விலையில் கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் கூடுதலாக ரூ. 7,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் சலுகையைப் பழைய போன்களுக்கு வழங்குகிறது. Redmi நோட் 9 புரோ மேக்ஸ் ரூ. 2000 தள்ளுபடி பெற்று இப்போது வெறும் ரூ. 14,999 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

ரெட்மி, மோட்டோரோலா மற்றும் iQoo3 மீது அபார சலுகை

ரெட்மி, மோட்டோரோலா மற்றும் iQoo3 மீது அபார சலுகை

மோட்டோ ஜி 5 ஜி20, ரூ. 2000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் சலுகையுடன் இப்போது இந்த விற்பனையில் வெறும் ரூ. 20,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல், iQoo3 ஸ்மார்ட்போன் ரூ. 24,990 விலையில் துவங்கி வட்டியில்லா தவணை மூலம் மாதத்திற்கு வெறும் ரூ. 4,998 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி F41 சாதனம் ரூ.1500 விலை குறைப்புடன் ரூ. 15,999 (64ஜிபி மாடல்) மற்றும் ரூ. 16,499 (128ஜிபி மாடல்) விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Smartphone Carnival Sales Begins From March 8 to go on till March 12 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X