ஐபோன் X, ஐபோன் 8 உட்பட 9 ஐபோன் மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு; மார்ச் 2 வரை மட்டுமே.!
பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், தனது ஆப்பிள் டேஸ் விற்பனையின் மற்றொரு சுற்றை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின்கீழ் பல வகையான ஐபோன், ஐபாட் மற்றும் மேக்புக் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், தனது ஆப்பிள் டேஸ் விற்பனையின் மற்றொரு சுற்றை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின்கீழ் பல வகையான ஐபோன், ஐபாட் மற்றும் மேக்புக் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

உடன் எஸ்பிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஆகியவைகளுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை விலையில் கிடைக்கும் ஐபோன் மாதிரிகளை பொறுத்தமட்டில் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவைகள் அடங்கும்.

மார்ச் 2 வரை.!
இதேபோல் பல்வேறு வகையான ஐபாட், மேக்புக், மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் இந்த வாய்ப்பின் கீழ் தள்ளுபடிகள் உள்ளன. இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் ஆண்ட்ராய்டு சாதனங்கழும் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும். இந்த விற்பனையானது மார்ச் 2 (வெள்ளி)வரை இயங்கும்.

ஐபோன் எக்ஸ்
இந்த விற்பனையின் கீழ், ஐபோன் எக்ஸ் ஆனது ரூ.82,999/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.89,000/- ஆகும். மறுகையில் உள்ள ஐபோன் எக்ஸ்-ன் 256ஜிபி மாறுபாடு ஆனது ரூ.97,999/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலையானது ரூ.1,02,000/- ஆகும்.

ஐபோன் 8
ஐபோன் எக்ஸ் தவிர வேறு ஐபோன் மாடல்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையின் கீழ் ஐபோன் 8 அனைத்து ரூ..54,999/-க்கு விற்பனையாகிறது. இதன் அசல் விலை ரூ.64,000/- ஆகும்.

ஐபோன் 8 பிளஸ்
மறுகையில் உள்ள ஐபோன் 8 பிளஸ் ஆனது ரூ.64,999/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.73,000/- ஆகும். ஐபோன் 8-ன் 256ஜிபி மாறுபாடு ஆனது ரூ.69,999/-க்கு விற்பனையாகிறது மற்றும் இதன் அசல் விலை ரூ.77,000/- ஆகும் மற்றும் ஐபோன் 8 பிளஸ்-ன் 256 ஜிபி மாறுபாடு ஆனது ரூ.79,999/-க்கு கிடைக்கும். இதன் அசல் விலையானது ரூ.86,000/- ஆகும்.

ஐபோன் 7 பிளஸ்
ஐபோன் 7 பிளஸ்-ன் 32 ஜிபி மாறுபாடானது ப்ளிப்கார்ட் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.56,999/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலையானது ரூ.59,000/- ஆகும். ஐபோன் 7 பிளஸ்-ன் 128ஜிபி ஆனது ரூ.65,999/-க்கு விற்பனையாகும். இதன் அசல் விலை ரூ.68,000/- ஆகும்.

ஐபோன் 6 பிளஸ்
மலிவான ஐபோன் மாதிரிகளை பொறுத்தமட்டில், ஐபோன் 7-ன் 32 ஜிபி மாறுபாடு ஆனது ரூ.41,999/-க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலையானது ரூ.49,000/- ஆகும். மறுகையில் உள்ள ஐபோன் 6 பிளஸ்-ன் 32 ஜிபி மாதிரியானது ரூ.40,999/-க்கு வாங்க கிடைக்கும் மற்றும் இதன் அசல் விளையானது ரூ.49,000/- ஆகும்.


ஐபோன் 6எஸ்
ஐபோன் 6எஸ்-ன் 32 ஜிபி மாறுபாடானது ரூ.32,999 /-க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலையானது ரூ.40,000/- ஆகும். மறுகையில் உள்ள ஐபோன் 6-ன் 32 ஜிபி மாறுபாடானது ரூ.24,999/-க்கு கிடைக்கிறது, இதன் அசல் விலை ரூ.29,500/- ஆகும். இறுதியாக ஐபோன் எஸ்இ-ன் 32 ஜிபி மாறுபாடானது ரூ.18,999/-க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலையானது ரூ.26,000/- ஆகும்.


Click it and Unblock the Notifications