பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026.. இந்த தேதியில் ஆரம்பம்.. கம்மி விலையில் டிவி, போன் வாங்கலாம்..
பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின விற்பனை 2026க்கான தேதிகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை வரும் ஜனவரி 17-ம் தேதி தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறும். பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் 24 மணிநேர முன்கூட்டியே இந்த சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்க முடியும்.
அதாவது ஜனவரி 16-ம் தேதி முதல் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களை சலுகை விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திற்கும் தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட்டில் வெளியான தகவலின்படி, எச்டிஎப்சி (HDFC) வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இஎம்ஐ விருப்பங்களும் உள்ளன.
குறிப்பாக ஜனவரி 17-ம் தேதி முதல் ரெட்மி நோட் 15, போக்கோ எம்8 5ஜி, ஒப்போ ரெனோ 15 சீரிஸ் போன்ற புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் விலை குறைப்பு இருக்கும் என் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமி, மோட்டோரோலா, போக்கோ, விவோ, கூகுள் பிக்சல் போன்ற முக்கிய பிராண்டுகளின் போன்கள் விலை குறைக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் ஐபோன் 16 மாடலுககு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி, ஸ்மார்ட் டிவிகள், ஃபிரிட்ஜ் ( குளிர்சாதனப் பெட்டி) போன்ற பல சாதனங்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக நிங்கள் புதிய சாதனங்கள் வாங்க வேண்டும் என்றால் ஜனவரி 17-ம் தேதி முதல் வாங்குவது நல்லது. அப்போது தான் சிறந்த தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
போக்கோ எம்8 5ஜி பிளிப்கார்ட் விற்பனை
மேலும் சமீபத்தில் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய போன் வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எம்8 5ஜி அம்சங்கள் 6.77-இன்ச் 3டி கர்வ்டு டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்ஸ், 20ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 3200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரெட், 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 68.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் கொண்டுள்ளது போக்கோ எம்8 5ஜி போன். அட்ரெனோ ஜிபியு,ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங்ஸ் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
5520mAh பேட்டரி, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு, 5ஜி, 4ஜி LTE, ப்ளூடூத் 5.1, வைஃபை 5 , இஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அனைத்து வசதிகளும் இந்த போனில் உள்ளன. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 5ஜி விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.19,999-ஆக உள்ளது. இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.21,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








