Home
News

இந்த பொங்கல் நம்மள்து.. ரெடியா இருங்க.. ஜன.14 முதல் Flipkart-ல் ஆஃபர் மழை.. என்னென்ன போன்கள் மீது டிஸ்கவுண்ட்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் தனது 2024 குடியரசு தின விற்பனைக்கான (Republic Day Sale 2024) தேதிகளை அறிவித்துள்ளது. தமிழர்கள் இதை பொங்கல் சிறப்பு விற்பனையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விற்பனை எப்போது தொடங்கி, எப்போது முடியும்? இதன்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

2024 பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை எப்போது தொடங்கி, எப்போது முடியும்? இது ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனை குறித்த டீசர் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் லைவ் ஆகியுள்ளது. அதன்கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் போன்களின் பட்டியலையும் பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது.

ரெடியா இருங்க.. ஜன.14 முதல் Flipkart-ல் ஆஃபர் மழை!

டீசர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின விற்பனையானது ஜனவரி 19 ஆம் தேதி வரை வரை தொடரும். மேலும் வழக்கம் போலவே பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு, இந்த விற்பனை நிகழ்விற்கான அணுகல் ஒரு நாளுக்கு முன்னதாகவே கிடைக்கும். அதாவது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கான குடியரசு தின விற்பனை ஜனவரி 13 ஆம் தேதியே தொடங்கும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது? ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 12 (iPhone 12) போன்ற ஆப்பிள் மாடல்கள் மீது எதிர்பார்க்காத அளவிலான நேரடி தள்ளுபடி கிடைக்கும்.

கூடவே கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7a), கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8), சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE 5G), மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo), சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

கூடவே விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro), ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 10 Pro), விவோ டி2எக்ஸ் (Vivo T2x), போக்கோ எக்ஸ்5 (Poco X5), ரியல்மி 11 (Realme 11), ரெட்மி 12 (Redmi 12), சாம்சங் கேலக்ஸி எப்34 (Samsung Galaxy F34) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் சரியாக என்ன விலைக்கு வாங்க கிடைக்கும் என்கிற விவரங்கள் ​​ஜனவரி 14 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடபப்படலாம். இந்த இடத்தில் குடியரசு தின சிறப்பு விற்பனை நிகழ்வுக்கு முன்பாகவே ஐபோன் 15 மாடலானது, பிளிப்கார்ட் வழியாக ஏற்கனவே மிக குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது.

ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.72,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இது ரூ.79,900 க்கு அறிமுகமானது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 15 மீது நேரடியாக ரூ.6,901 என்கிற பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை எப்போது தொடங்கும்? பிளிப்கார்ட்டின் போட்டியாளரான அமேசான் வலைத்தளமும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் தனது குடியரசு தின சிறப்பு விற்பனையை தொடங்குகிறது. இதன்கீழும் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் மீது அபாரமான தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையின போது ஐபோன் 13 (iPhone 13), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G), மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra), ஐக்யூ 12 (iQOO 12), ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60X 5G) போன்ற ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ34 (Samsung Galaxy A34), ரெட்மி 12 (Redmi 12), லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G), ஒன்பிளஸ் 11 (OnePlus 11) ஐக்யூ இஸட்7 ப்ரோ (iQOO Z7 Pro), ஹானர் 90 (Honor 90), ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

பழைய ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series), ஒன்பிளஸ் 12 சீரீஸ் (OnePlus 12 Series), ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) மற்றும் ரெட்மி நோட் 13 சீரீஸ் (Redmi Note 13 Series) போன்ற வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களையும் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Republic Day Sale 2024 Starts on January 14 List of phones to available at lower price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X