ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் பிளஸ் அறிமுகம்: என்ன சலுகை கிடைக்கும்.!

பொதுவாக அமேசான் பிரைம், இப்போது வரும் பிளிப்கார்ட் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

|

தொடர்ந்து ஆன்லைன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோரை திறந்தது, இதை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு பெரிய திட்டமிட்டு பிளிப்கார்ட் பிளஸ் என்ற
ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளத்தை திறந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் பிளஸ் அறிமுகம்.!

குறிப்பாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளத்தை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளம்.

பிளிப்கார்ட் பிளஸ் சிறப்பம்சம் என்ன?

பிளிப்கார்ட் பிளஸ் சிறப்பம்சம் என்ன?

இந்த பிளிப்கார்ட் பிளஸ் பொறுத்தவரை இலவச விரைவு டெலிவரி,புதிய பொருட்களுக்கான சலுகைகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

பொதுவாக அமேசான் பிரைம், இப்போது வரும் பிளிப்கார்ட் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு தகுந்தபடி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மாத/வருட சந்தா திட்டத்தை செலுத்தி இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் திட்டத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

 பிக் பில்லியன் தின விற்பனை

பிக் பில்லியன் தின விற்பனை

மேலும் பிளிப்கார்ட் வழங்கும் பிக் பில்லியன் தின விற்பனை, பிக் ஷாப்பிங் தின விற்பனை போன்ற பல்வேறு சிறப்பு விற்பனை நாட்களில் சலுகைகள் பயன்படுத்தி கொள்ள இந்த பிளிப்கார்ட் பிளஸ் கண்டிப்பாக பயன்படும்.

கல்யாண் கிருஷ்னமூர்த்தி

கல்யாண் கிருஷ்னமூர்த்தி

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த இணையதளம் வெளியிடப்படும் என்று பிளிப்கார்ட் தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்னமூர்த்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flipkart Plus Programme With Free Delivery Early Access to Sale Events More Benefits Announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X