Home
News

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி.! முந்துங்கள்.!

Vu நிறுவனம் சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டியா அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக Vu நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Vu நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அசத்தலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android) மாடலுக்கு தான் தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.35,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி.! முந்து

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Vu நிறுவனம்.

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி.! முந்து

டூயல் கோர் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி.! முந்து

மேலும் இந்த ஏர பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் காட்சிகளை மிகவும் துல்லியமாகப் பார்க்க முடியும். அதற்குத் தகுந்த வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் போன்ற ஹாட்கீகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 48 percent discount on 43-inch Vu Premium TV model : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X