ரூ.20,000-க்கு கீழ் விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி.!
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை நாளை (பிப்ரவரி 11) நிறைவு பெறுகிறது. எனவே இப்போதே ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் கம்மி விலையில் வாங்குவது நல்லது.
குறிப்பாக தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பிரபலமான தாம்சன் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு தான் தள்ளுபடி கிடைத்துள்ளது.

எவ்வளவு தள்ளுபடி?
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.33,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸமார்ட் டிவி மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.19,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் உடனடி 10 சதவீதம் தள்ளுபடி கூட கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்கள்?
இப்போது 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் ARM Cortex A53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்.

மேலும் இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாகக் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்.
ஆடியோ எப்படி?
இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் Surround சவுண்ட் ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். பின்பு பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி
குறிப்பாக புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ் நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட இந்த தாம்சன் நிறுவனத்தின் 43-இன்சஸ்மார்ட் டிவி மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








