Home
News

42 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவுதானா? - இந்த சூப்பர் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க...

இந்தியாவில் தரமான ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரபலமான நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அசத்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தாம்சன் (Thomson) எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 40 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த 42-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.28,499-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.16,999-விலையில் இந்த டிவியை வாங்க முடியும்.

42 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவுதானா?

மேலும் இப்போது தாம்சன் (Thomson) எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஸமார்ட் டிவி ஆனது1080 x 1920 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

Realtek பிராசஸர் வசில் இந்த டிவியில் உள்ளது. எனவே இது சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறினால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கின்றன. அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாமசான தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

30 வாட்ஸ் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்.

அதேபோல் தாம்சன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் 5 புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தது. அதாவது இந்த டிவிகள் 32 இன்ச், 40 இன்ச், 42 இன்ச், 43 இன்ச் மற்றும் 50 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளில் வாங்க கிடைக்கும். இந்த ஐந்து ஸ்மார்ட் டிவிகளுக்கு தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

42 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவுதானா?

தாம்சன் அறிமுகம் செய்த புதிய டிவிகள் ரியல்டெக் ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 30W ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் (Dolby Digital) போன்ற அம்சங்களுடன் வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart offers 40 percent discount on Thomson FA Series 42 inch Smart TV: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X