அடடே.. இவ்வளவு கம்மி விலையில் 5ஜி போன் கிடைக்குதா? Infinix போனுக்கு ஆஃபர் போட்டு அசத்திய பிளிப்கார்ட்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மர்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் முன்பு ரூ17,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த போனை ரூ.11,499-க்கு வாங்க முடியும்.

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கும் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். மேலும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் 1080 × 2408 பிக்சல்ஸ், 180Hz டச் சாம்பிளிங் வீதம், 500nits பீக் பிரைட்னஸ், 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் 5எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மாரட்போன். பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








