32-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருக்கா? அப்போ இந்த SAMSUNG டிவியை பாருங்க.! அட்டகாசமான தள்ளுபடி.!
சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட தென்கொரிய நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை போட்டிபோட்டு வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் மிகவும் பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் நிறுவனத்தின 32-இன்ச் ஸ்மார்ட் டிவி (UA32T4380AKXXL) மாடலுக்கு தான் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு 18,900-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ரூ.13,990-க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
இந்த சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெசல்-லெஸ் டிசைன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் திரை உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் கிரிஸ்டல் பிராசஸர் 4கே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி எச்டிஆர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ள கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் சிறந்த பட தரத்தை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
மேலும் இந்த டிவி அல்ட்ரா க்ளீன் வியூ (Ultra Clean View) தொழில்நுட்பத்துடனும் வருகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரிஜினல் கன்டென்ட்டை பகுப்பாய்வு செய்து, நாம் காணும் காட்சிகளை மேம்படுத்துமாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஸ்கிரீன் ஷேர், பெர்சனல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த 32-இன்ச் சாம்சங் டிவி ஆனது டைசன் இயங்குதளம் (Tizen OS) மூலம் இயங்குகிறது. இந்த டிவி ஹை டைனமிக் ரேன்ஞ்சையும், சிறந்த பிக்சர் குவாலிட்டியையும் வழங்குவதாகவும் சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட் உடனான 20W ஸ்பீக்கர் யூனிட்டையும் கொண்டுள்ளது இந்த சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் 1.5ஜிபி ரேம் வசதி உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியில் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications








