தமிழ் இருக்கே மாற்று எதுக்கு: தமிழக மக்களுக்கு பிளிப்கார்ட்டின் பிரத்யேக அறிமுகம்!

|

வால்மார்ட்டுக்கு சொந்தமான இந்திய இணையவழி நிறுவனமான பிளிப்கார்ட் தங்களது தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி ஆதரவு பயன்பாட்டை இணைத்துள்ளது.

ஆன்லைன் விற்பனை தளம்

ஆன்லைன் விற்பனை தளம்

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் பிரதானமாக விளங்குவது பிளிப்கார்ட், இந்த தளம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி விற்பனை தின அறிவிப்புகள் அறிவித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

வால்மார்ட்டுக்கு சொந்தமான இந்திய இணையவழி நிறுவனம்

வால்மார்ட்டுக்கு சொந்தமான இந்திய இணையவழி நிறுவனம்

இந்த நிலையில் வால்மார்ட்டுக்கு சொந்தமான இந்திய இணையவழி நிறுவனமான பிளிப்கார்ட் தனது பயன்பாட்டில் மூன்று இந்திய மொழிகளுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளது. அது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம். இது கடந்த ஆண்டு அதன் பயன்பாட்டில் இந்தி ஆதரவை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Google Pay உண்மையில் பாதுகாப்பானது தானா? ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?Google Pay உண்மையில் பாதுகாப்பானது தானா? ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?

ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகள்

ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகள்

இந்த மாத தொடக்கத்தில் பிளிப்கார்ட் தனது பயன்பாட்டில் மளிகை கடைக்காரர்களுக்கு குரல் கொடுக்கும் உதவியாளராக ஆங்கிலம், இந்தி மற்றும் கலப்பு மொழி கட்டளையிடுகை ஆதரவை அறிமுகப்படுத்தியது. அதாவது குரல் மூலம் டைப் ஆதரவு இதுவாகும். இதில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேசி ஆர்டர் செய்யலாம்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் மொத்த வாடிக்கையாளர்கள் கணக்கில் அடுக்கு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலில் வாங்குபவர்கள் தான் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்பை அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

விற்பனை விலை சிறு அளவில் மட்டுமே வித்தியாசம்

விற்பனை விலை சிறு அளவில் மட்டுமே வித்தியாசம்

மெட்ரோ நகரங்களுக்கு இணையாக இந்த 2 நகர மக்களும் அனைத்து பொருட்களையும் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ நகரங்களை விட பிற 2 நகர விற்பனை விலை சிறு அளவில் மட்டுமே வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் டிஜிட்டல் முறை

ஆன்லைன் டிஜிட்டல் முறை

ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தி பேசும் பயனர்கள்

இந்தி பேசும் பயனர்கள்

பிளிப்கார்ட் அதன் இந்தி பேசும் பயனர் தளத்துடன் சிறிது தக்கவைப்பைக் காண்கிறது. பயன்பாட்டை தேர்ந்தெடுத்தவர்களில் குறிப்பிட்ட பயனர்களில் 95% க்கும் அதிகமானோர் இந்தி வழி பயன்முறையை இணைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் வலைதளத்தில் இந்தி

அமேசான் வலைதளத்தில் இந்தி

2018 ஆம் ஆண்டில், பிளிப்கார்ட்டின் போட்டியாளரான அமேசான் தனது வலைத்தளத்தை இந்தியில் அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு, அதன் அலெக்சா ஸ்மார்ட் குரல் உதவியாளருக்கு இந்தி ஆதரவையும் வழங்கியது.

சத்தமில்லாமல் டிராய் அதிரடி: விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்.!சத்தமில்லாமல் டிராய் அதிரடி: விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்.!

வாடிக்கையாளர்களை கவரும் விதமான திட்டம்

வாடிக்கையாளர்களை கவரும் விதமான திட்டம்

அடுத்து வரும் நாட்களில் சிறு நகரங்களில் இருந்து சுமார் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்களை வாங்க முன்வருபவர்கள் எனவும் அவர்களை கவரும் விதமாக முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியே இது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

source: thenextweb.com

Best Mobiles in India

English summary
Flipkart now add tamil, telugu and kannada languages in its platform

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X