இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. ஒத்த iPhone மேல இத்தனை ஆபர்-ஆ! Flipkart அண்ணே.. ரொம்ப தேங்க்ஸ்!

|

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart), குறிப்பிட்ட ஐபோன் (iPhone) மாடல் ஒன்றின் மீது எக்கச்சக்கமான ஆபர்கள் (Offers) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன மாடல்? அதன் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

"இவ்ளோ நாளாக இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!" என்றும் கூறும் அளவிற்கு, பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 12 மினி (iPhone 12 Mini) மாடல் மீது எக்கச்சக்கமான ஆபர்களை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டின் அனைத்து சலுகைகளையும் சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில் நினைத்து பார்க்க முடியாத ஆபர் விலையில் ஐபோன் 12 மினி மாடலை வாங்க முடியும்.

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

ஐபோன் 12 மினி மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது?

ஐபோன் 12 மினி மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது?

பிளிப்கார்ட் வலைத்தளமானது, ஐபோன் 12 மினி மாடலின் பிளாக் கலர் (Black) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை 36% என்கிற தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்கிறது. மற்ற கலர் ஆப்ஷன்களானது 34% என்கிற தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஐபோன் 12 மினி மீது சில பேங்க் ஆபர்களும், கேஷ்பேக் ஆபர்களும், எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அணுக கிடைக்கிறது. அவைகளை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், ஐபோன் 12 மினி மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும்!

ஐபோன் 12 மினி கிடைக்கும் வங்கி சலுகைகளின் விவரங்கள்:

ஐபோன் 12 மினி கிடைக்கும் வங்கி சலுகைகளின் விவரங்கள்:

- பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளின் (Bank of Baroda credit card) கீழ் நடக்கும் இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் தள்ளுபடி (அதாவது ரூ.1,500 வரை என்கிற தள்ளுபடி) கிடைக்கும்.

- ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டுகளின் கீழ் (IDFC first credit card) நடக்கும் இஎம்ஐ பரிவர்த்தனைகளிலும் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

- இன்டஸ்லேண்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளின் (Induslnd Bank credit card) கீழ் நடக்கும் இஎம்ஐ பரிவர்த்தனைகளிலும் கூட10 சதவீதம் தள்ளுபடியை பெறலாம்.

கேஷ்பேக் சலுகைகள்:

கேஷ்பேக் சலுகைகள்:

- பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டை (Flipkart Axis Bank card) பயன்படுத்தி ஐபோன் 12 மினி மாடலை வாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்.

- ஒருவேளை நீங்கள் பேடிஎம் வேலட் (Paytm Wallet) வழியாக பணம் செலுத்தினால் (குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பான ரூ.1000 க்கு) ரூ.100 என்கிற உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை ஒரு பேடிஎம் அக்கவுண்ட்டிற்கு ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

- மற்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) வழியிலான பரிவர்த்தனைகளில் நீங்கள் ரூ.250 என்கிற தள்ளுபடியை பெறலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

எக்ஸ்சேன்ஜ் ஆபர் உண்டா?

எக்ஸ்சேன்ஜ் ஆபர் உண்டா?

ஆம் உண்டு! ஐபோன் 12 மினி மாடலின் விலையை இன்னும் குறைக்க விரும்பினால், உங்கள் பழைய போனை கொடுத்து பிளிப்கார்ட்டின் எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் (Exchange Offer) பயன்படுத்தி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் வலைதளத்தின் கூற்றுப்படி, உங்கள் பழைய போனுக்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) ரூ.23,000 வரை செல்லும். முழுமையான எக்ஸ்சேன்ஜ் ஆபரை பெற உங்கள் பழைய ஸ்மார்ட்போன் ஆனது நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துகொள்ளவும்.

Best Mobiles in India

English summary
Flipkart New 2023 Offer iPhone 12 Mini gets 36 Percent Flat Discount Along with Many More Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X