சூடுபிடிக்கும் 2025 குடியரசு தின SALE.. Amazon-ஐ தொடர்ந்து Flipkart தளமும் விற்பனை தேதியை அறிவித்தது!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தை தொடர்ந்து, 2025 சுதந்திர தின சிறப்பு விற்பனைக்கான தேதிகளை பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமும் அறிவித்துள்ளது. இம்முறை பிளிப்கார்ட் வலைத்தளமானது அதன் சுதந்திர தின விற்பனையை பிளிப்கார்ட் நினைவுச்சின்ன விற்பனை 2025 (Flipkart Monumental Sale 2025) என்கிற பெயரின்கீழ் நடத்த உள்ளது
பிளிப்கார்ட் மொனுமென்டல் விற்பனையானது ஜனவரி 14 முதல் ஜனவரி 19, 2025 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களில், வாடிக்கையாளர்கள் பலவிதமான தயாரிப்புகள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம். வழக்கம் போல இந்த விற்பனையிலும் பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) முன்னுரிமை அளிக்கப்படும்.

அதவாது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு, பிளிப்கார்ட் மொனுமென்டல் விற்பனையானது ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 13, 2025 அன்று திறக்கப்படும். இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள், மியூசிக் சிஸ்டம்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் மீது பெரிய அளவிலான டீல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம்களை தவிர, வீட்டு உபயோகப் பொருட்களின் மீதும் சலுகைகள் இருக்கும். கூடவே பேஷன் பொருட்கள், காலணிகள் மற்றும் பலவற்றிலும் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி அமேசான் இந்தியா வலைத்தளமானது, ஏற்கனவே அதன் 2025 அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான (Amazon great republic day sale 2025) ஆரம்ப தேதியை அறிவித்துவிட்டதுது. இது ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டை போல் இல்லாமல் அமேசான் வலைத்தளமானது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கும் என்கிற விவரங்களை பட்டியலிட்டுள்ளது
அந்த பட்டியலில் ஒன்பிளஸ், ஐக்யூ, சாம்சங், ரியல்மி, ரெட்மி, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா, ஒப்போ, போக்கோ, விவோ, லாவா, எச்எம்டி ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பில்ஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் 12 மாடல்கள் உள்ளன.
ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐக்யூ 13 5ஜி, ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி, ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி, ஐக்யூ இஸட்9எஸ் 5ஜி, ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி, ஐக்யூ 12 5ஜி ஆகிய மாடல்கள் உள்ளன. சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்05 5ஜி ஆகிய மாடல்கள் உள்ளன
ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரியல்மி நார்சோ என்61, ரியல்மி நார்சோ 70எக்ஸ், ரியல்மி நார்சோ என்65, ரியல்மி ஜிடி 6டி, ரியல்மி நார்சோ 70 டர்போ, ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஆகிய மாடல்கள் உள்ளன.ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி ஏ4 5ஜி, ரெட்மி 13 5ஜி, ரெட்மி 13சி 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்கள் உள்ளன.
டெக்னோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் டெக்னோ போவா 6 நியோ 5ஜி, டெக்னோ பாப் 9 5ஜி, டெக்னோ பாண்டம் வி போல்ட் 5ஜி, டெக்னோ பாப் 9 4ஜி ஆகிய மாடல்கள் உள்ளன. இது தவிர்த்து ஹானர் 200 5ஜி, மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா, ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி, போக்கோ எம்6 5ஜி, விவோ எக்ஸ்200 ப்ரோ 5ஜி, லாவா அக்னி 3 5ஜி, எச்எம்டி பியூஷன் 5ஜி ஆகிய மாடல்களின் மீது தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசான் பட்டியலிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








