பிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைதளத்தில் Month-End மொபைல் ஃபெஸ்ட்டிவல் எனும் தலைப்பில் சியோமி மோட்டோ, நோக்கியா, ஹானர் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் ..
குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு சலுகை வரும் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும். மேலும் இப்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போகோ எப்1:
சியோமி நிறுவனத்தின் போகோ எப்1(6ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.20,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

நோக்கியா 6.1:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 7எஸ்:
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.5,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஹானர் 9 ஐ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு ஹானர் 9 லைட்
சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 20ஐ:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு இன்பினிக் எஸ்4 சாதனத்திற்கும் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி7:
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனி; பானாசோனிக் எலுகா இசெட்1 ப்ரோ, ஒப்போ, சாம்சங், ஐபோன் போன்ற சாதனங்களுக்கும் குறிப்பிட்ட சலுகை வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications