Home
News

ரூ.6000 திற்கு போன்.. இதைவிட கம்மி விலையில் Mobile கிடைக்வே கிடைக்காது.. Flipkart மொபைல் போனன்சா விற்பனை..

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் இப்போது மொபைல் போன்களை மலிவு விலையில் விற்று தீர்க்க முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. இதற்காக நிறுவனம் இப்போது பிளிப்கார்ட் மொபைல் போனன்சா சேல்ஸ் (Flipkart Mobile Bonanza Sales) என்ற சிறப்பு விற்பனையை துவங்கியுள்ளது.

புதிதாக மொபைல் (mobile) வாங்க வேண்டும் என்ற ஐடியா கொண்டவர்கள், இந்த சிறப்பு விற்பனையை தவறவிட கூடாது. தீபாவளி தருணத்தின் போது, நடைபெற்ற சிறப்பு விற்பனையை மிஸ் செய்தவர்கள், இந்த பிளிப்கார்ட் போனன்சா விற்பனையை (Flipkart bonanza sales) பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சிறந்த மொபைல் சாதனங்களை அதன் அசல் விலையை விட மிகவும் குறைந்த மற்றும் மலிவான விலையில் வாங்கி மகிழலாம்.

ரூ.6000 திற்கு போன்.. இதைவிட கம்மி விலையில் Mobile கிடைக்வே கிடைக்காது

இந்த பிளிப்கார்ட் மொபைல் போனன்சா சேல்ஸ் சிறப்பு விற்பனை இன்று முதல் துவங்கி டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் கீழ் பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது அபார சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் அதிக சலுகையை பெற்று, நம் கண்களை கவர்ந்த சில துடிப்பான ஸ்மார்ட்போன்களை இங்கு உங்களுக்காக தேர்வு செய்துள்ளோம்.

1. போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro):
இந்த Poco X5 Pro ஸ்மார்ட்போன் சாதனத்தின் அசல் விலை ரூ.22,999 ஆகும். தற்போதைய, பிளிப்கார்ட் மொபைல் போனன்சா சேல்ஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இதன் விலை ரூ.4,000 குறைக்கப்பட்டு, இப்போது வெறும் ரூ.18,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்டை கொண்டிருக்கும் பெஸ்ட் 5G போனாக திகழ்கிறது. இந்த சிப்செட் பெரும்பாலும் ரூ.30,000 முதல் ரூ.40,000 விலை போன்களில் மட்டுமே காணப்படுகிறது.

2. நத்திங் ஃபோன் (2) (Nothing Phone 2):
நத்திங் ஃபோன் (2) சாதனம் பிளிப்கார்ட் வழியாக அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.44,999 என்ற விலையை கொண்டிருந்தது. இப்போது பிளிப்கார்ட் மொபைல் போனன்சா விற்பனைக்கு பிறகு இதன் விலை ரூ.39,999 ஆகி குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் மீது முழுவதுமாக ரூ.5,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனரா பேங்க் கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது. இது நத்திங் போன் (2) சாதனத்தின் விலையை இன்னும் கணிசமாக குறைக்கிறது.

3. சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14):
சாம்சங் கேலக்ஸி எம்14 சாதனம் இப்போது பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் ரூ.15,000 பட்ஜெட் கீழ் புது ஸ்மார்ட்போனை வாங்க ஆசைப்பட்டால், இது தான் உங்களுக்கான சரியான தேர்வு. Samsung Galaxy M14 இன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ.13,399 விலையில் வாங்க கிடைக்கிறது. கனரா பேங்க் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 10% தள்ளுபடியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4. மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40):
மோட்டோரோலா எட்ஜ் 40, ரூ.30,000க்கு கீழ் உள்ள சிறந்த 5ஜி போன்களில் ஒன்றாகும். இது இப்போது ரூ.26,999 என்ற கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.29,999 ஆகும். பிளிப்கார்ட் போயன்சா சேல்ஸ் தள்ளுபடியில் இதன் விலை குறைந்துள்ளது. நல்ல அம்சங்களை ஒன்றாக பேக் செய்து, சிறந்த பெர்பார்மென்ஸ் உடன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை விரும்புபவர்கள் இந்த மோட்டோரோலா ஃபோனை வாங்கலாம்.

5. ரெட்மி 12சி (Redmi 12C):
ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 என்ற அசல் விலையுடன் பட்டியலிடப்பட்டிருந்தது. தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் மொபைல் போனன்சா சிறப்பு தள்ளுபடியில் மூலம் இதன் விலை ரூ.7200 வரை குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த போனின் விலை இப்போது ரூ.6,799 என்ற அடிமட்ட விலைக்கு சென்றுள்ளது. இதை விட குறைந்த விலையில் போன் கிடைக்காது என்பதனால், உடனே தட்டி தூக்கிவிடுங்கள். இன்னும் ஏராளமான மாடல்கள் மீதும் சலுகை கிடைக்கிறது. மேலும் அறிந்துகொள்ள பிளிப்கார்ட் பக்கத்தை பாருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Mobile Bonanza Sale Offer and Discounts On 5G Flagship and Fast Selling Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X