ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் தளத்தில் அதிரடி சலுகை அறிவிப்பு.!
மிகவும் எதிர்பார்த்த மொபைல்ஸ் போனான்ஸா விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஆப்பிள் ஐபோன் எஸ்இ(2020) மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

அதாவாது ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை இந்த விலைகுறைப்பு சலுகை இருக்கும். இந்த விற்பனையில் மேற்குறிப்பிட்ட ஆப்பிள் தவிர்த்து ரியல்மி எக்ஸ் 50ப்ரோ 5ஜி, ஐக்யூ 3, ஒப்போ ரெனோ 2, மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஜூம் போன்ற ஸ்மார்ட்போன்களின் மீதும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது ரூ.1000என்கிற தள்ளுபடியையும், புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் ஐபோன் எஸ்இ (2020) மாடலானது ரூ.42,500 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.35,999 க்கு (64 ஜிபி) வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபோன் எஸ்இ(2020) மாடலின் 128ஜிபி விருப்பமானது முன்பு ரூ.47,800-ஆக இருந்தது,இந்த விலைகுறைப்பின் மூலம்
ரூ.40,999-க்கு வாங்க கிடைக்கும்.ஐபோன் எஸ்இ(2020) மாடலின் 256ஜிபி மாடலானது முன்பு ரூ.58,300-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.50,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு நோ காஸ்ட்EMI விருப்பங்கள் மற்றும் பரிமாற்ற தள்ளுபடியையும் வழங்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்ஆர்
பிளிப்கார்ட் தளத்தின் மொபைல் போனான்ஸா விற்பனையில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இதன் 64ஜிபி விருப்பமானது முன்பு ரூ.52,500-ஆக இருந்தது, இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.45,999-க்கு வாங்க கிடைக்கும். பின்பு ஐபோன் எக்ஸ்ஆர் 128ஜிபி விருப்பமானது முன்பு ரூ.57,800-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.51,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்திற்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் கூடுதல் பரிமாற்ற தள்ளுபடியை பெறமுடியும்.

ரெட்மி கே20
பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின் கீழ் க்ஸ்சேன்ஜ் ஆபரை பயன்படுத்தி ஒருவர் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை ரூ.19,999 க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சிறப்பு விற்;பனையில் ஒப்போ ரேனோ 2எஃப் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.17,990-க்கு வாங்க கிடைக்கிறது, இதன் அசல் விலை ரூ.18,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒக்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,990-க்கு வாங்க கிடைக்கிறது, இதன் அசல் விலை ரூ.8,990-ஆக உள்ளது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி,ஐக்யூ 3, ஒப்போ ஏ 12, மற்றும் விவோ ஒய் 50 சாதனங்களுக்கும் குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மொபைல் போனான்ஸா விற்பனையில் மோட்டோரோலா ரேஸர், ஒப்போ ரெனோ 2 இசட் ஒப்போ ரெனோ 2, ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம், சாம்சங் கேலக்ஸி ஏ 71 மற்றும் எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ போன்ற ஸ்மார்ட்போன்களின் ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கும் தள்ளுபடி விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications