Home
News

Flipkart இலவசமாக வழங்கும் மூவி டிக்கெட்.! அதுவும் ஜோடியா.! எப்படி இதை இலவசமாக வாங்குவது?

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு வரவிருக்கும் காதலர் தினத்தை இம்முறை சமூக வலைதளங்கள் பல சலுகைகள் கொடுத்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. இது காதல் ஜோடிகளுக்கு குஷியாக இருந்தாலும், முரட்டு சிங்கிள்ஸ்களுக்கு கடுப்பை ஏற்றுகிறது.

அந்த வகையில் வேலன்டைன்ஸ் டே (Valentines Day) ஆஃபராக (Offer) ஃப்ளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவோருக்கு இலவசமாக இரண்டு சினிமா டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

Flipkart இலவசமாக வழங்கும் மூவி டிக்கெட்.! அதுவும் ஜோடியா.!

Flipkart வழங்கும் இலவச மூவிஸ் டிக்கெட்டை பெறுவது எப்படி?

தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த சலுகை பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 11:59 மணி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த சலுகை மூலம் பெற்ற வவுச்சர்களை, நீங்கள் (Vouchers) ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள், எப்போது வேண்டுமானாலும், எந்த திரைப்படத்திற்கு வேண்டுமானாலும் புக் (Book) செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வழிமுறை என்ன? பார்க்கலாம் வாங்க.

இந்த சலுகையை பயன்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவராக நீங்கள் இருப்பது அவசியம். மேலும், இந்த ஆஃபரை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் உங்களுக்குக் கணக்கு இருக்க வேண்டும். இந்த இரண்டும் உங்களிடம் இருந்து, ரூ.800-க்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட பர்சனல் கேர் (Personal Care), பியூட்டி கேர் (Beauty Care) பொருட்கள் அல்லது சாக்லெட்டுகளை பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு 11:59-க்குள் நீங்கள் ஆர்டர் (Order) செய்து வாங்கி இருக்க வேண்டும்.

இதை கட்டாயம் செய்ய கூடாது.. இப்படி செய்தால் இலவச டிக்கெட் கிடைக்காது மக்களே.!

அப்படி, 800 ரூபாய்க்கு மேல் மதிப்பிலான பொருட்களை வாங்கி இருப்பவருக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இவர்களுக்கு 2 இலவச மூவி டிக்கெட்டை பிளிப்கார்ட் வழங்குகிறது. 800 ரூபாய்க்கு மேல் என்று மளிகை பொருட்களையோ, வீட்டு உபயோகப் பொருட்களையோ வாங்கி விட்டு இந்த சலுகை வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது. காதலர் தினம் தொடர்பான பொருட்களை வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடி ஆகும்.

Flipkart இலவசமாக வழங்கும் மூவி டிக்கெட்.! அதுவும் ஜோடியா.!

Flipkart இலவச டிக்கெட்டை எப்படி பயன்படுத்தி டிக்கெட் புக் செய்வது?

- ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த பின்னர் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் டெலிவர் (Deliver) ஆகும் பொழுது அதனுடன் ஒரு டெலிவரி வவுச்சர் (Delivery Voucher) உங்களுக்கு அனுப்பப்படும்.
- அந்த வவுச்சரை ஸ்க்ராட்ச் (Scratch) செய்து அதில் கிடைக்கும் கூப்பன் கோடை (Coupon Code) இந்த http://www.flipkartmovies.rewardzpromo.com இணையதள முகவரியில் உள்ளீடு செய்ய வேண்டும்.
- வவுச்சர் கோடுடன் சேர்த்து உங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றையும் உள்ளீடு செய்து சப்மிட் (Submit) என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
- 24 மணி நேரத்தில் உங்கள் இமெயில் அல்லது மொபைல் எண்ணிற்கு அந்த தளத்தின் மூலம் ஓடிபி (OTP) ஒன்று அனுப்பப்படும்.
- அந்த OTPயை செலுத்தி நீங்கள் எந்த திரைப்படத்தை, எப்போது, எந்த தியேட்டரில் பார்க்க நினைக்கிறீர்களோ, அதனை தேர்வு செய்ய வேண்டும்.
- இரண்டு தேர்வுகள் கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது இரண்டு வெவ்வேறு திரைப்படங்கள், அவற்றிற்கான திரையரங்கத்தின் பெயர், தேதி, நேரம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் தேர்வு செய்யும் நாளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான தேதி அமைந்திருக்க வேண்டும்.

அவ்வளவுதான். திரைப்படம் ஆரம்பிப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் உங்களுக்கான இலவச டிக்கெட்டுகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். காதலர் தினத்தை உங்கள் அன்புக்குரியோருடன் விமர்சையாக கொண்டாடுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Is Offering Free Movie Tickets With Orders As Valentine’s Day Gift
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X