Home
News

பிளிப்கார்ட்ல ஆர்டர் போடப் போறீங்களா? ஒரே நாள்ல டெலிவரி வேண்டுமா? இப்படி செஞ்சா கிடைக்கும்.. புது சேவை..

பிளிப்கார்ட்ல (Flipkart) எதுவும் புதுசா ஆர்டர் போடப்போறீங்களா? அப்போ கட்டாயம் இந்த பதிவை நீங்கள் படித்தாக வேண்டும். இனி இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் பயனர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்ய பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய பாஸ்ட் டெலிவரி சேவையையும் பிளிப்கார்ட் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தினமும் பல கோடி சாதனங்களை ஆர்டர் செய்து, வாங்கி வருகிறார்கள். பிளிப்கார்ட் பயனர்களின் ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பிக்க நிறுவனம் சூப்பர் பாஸ்ட் டெலிவரி சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

பிளிப்கார்ட்ல ஆர்டர் போடப் போறீங்களா? ஒரே நாள்ல டெலிவரி வேண்டுமா?

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது வாங்க கிடைக்கும் பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு இந்த சூப்பர் பாஸ்ட் ஷிப்பிங் மற்றும் டெலிவரி விருப்பம் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம் இப்போது ஒவ்வொரு வட்டமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று பிளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 முக்கிய இந்திய நகரங்களில் இந்த சேவையை பிளிப்கார்ட் கொண்டுவரவுள்ளது.

பிளிப்கார்ட் அறிமுகம் செய்த புதிய சூப்பர் பாஸ்ட் டெலிவெரி சேவை (Flipkart Introduced Super Fast Delivery):

முதலில் முக்கியமான மற்றும் அதிக பிளிப்கார்ட் பயனர்களை கொண்ட சில நகரங்களில் இந்த சூப்பர் பாஸ்ட் ஷிப்பிங் மற்றும் டெலிவரி சேவையை வெளியிட நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியில், இந்த ஷிப்பிங் விருப்பம் நாட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் பயனர்களுக்கு ஒரே நாளில் டெலிவரி கிடைப்பது சாத்தியமானது என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சேவை பிப்ரவரி முதல் தொடங்கும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 20 நகரங்களில் இது கிடைக்கும். அவை அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்ல ஆர்டர் போடப் போறீங்களா? ஒரே நாள்ல டெலிவரி வேண்டுமா?

ஒரே நாள் அல்லது அதே நாளில் டெலிவெரி பெறுவது எப்படி?

இந்த முக்கிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் முதலில் அணுகலைப் பெறுவார்கள். பயனர்கள் ஒரே நாளில் டெலிவரி செய்ய, தகுதியான பொருளுக்கான ஆர்டரை மதியம் 1 மணிக்குள் ஆர்டர் செய்ய வேண்டும் என்பது பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளது. ஆர்டர் செய்த சம்பந்தப்பட்ட பொருளை நள்ளிரவு 12 மணிக்கு முன் (நள்ளிரவு) டெலிவரி பார்ட்னர்கள் டெலிவரி செய்வார்கள் என்று பிளிப்கார்ட் உறுதியளித்துள்ளது.

குறிப்பிட்ட நாளில் மதியம் 1 மணிக்குப் பிறகு செய்யப்படும் ஆர்டர்கள் மறுநாள் டெலிவரி செய்யப்படும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. Flipkart இன் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த சூப்பர் பாஸ்ட் ஷிப்பிங் மற்றும் டெலிவரி விருப்பம் கிடைக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், தற்போது பட்டியலில் குறிப்பிடப்பட்ட 20 நகரங்களில் இந்த மாத கடைசிக்குள் இந்த சேவை பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், குறிப்பாக மொபைல்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், புத்தகங்கள், தினசரி தேவை மற்றும் உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகள் ஒரே நாளில் டெலிவரி செய்ய தகுதியுடையதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இ-காமர்ஸ் தளமான Amazon, அதன் பயனர்களுக்கு ஒரே நாளில் டெலிவரி மற்றும் ஷிப்பிங் விருப்பங்களை வழங்குகிறது. Amazon Prime உறுப்பினர்களுக்கு, ஒரே நாள் மற்றும் இரண்டு நாள் டெலிவரி விருப்பங்கள் இலவசமாக கிடைக்கின்றன. அதேபோல், பிளிப்கார்ட்டின் இந்த சேவையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Introduced Same Day Shipping and Delivery in 20 Cities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X