காதலர் தினத்தை முன்னிட்டு சியோமி டிவி, ஸ்பீக்கர் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.!
சியோமி மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தனது "ஐ லவ் எம்.ஐ" விற்பனையைத் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் துவங்கியுள்ளது
சியோமி மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தனது "ஐ லவ் எம்.ஐ" விற்பனையைத் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் துவங்கியுள்ளது. இரண்டாம் நாள் விற்பனையான இன்றும் சியோமி மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது.

"ஐ லவ் எம்.ஐ" விற்பனை
இந்த "ஐ லவ் எம்.ஐ" விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, சியோமி ரெட்மி வொய்2, சியோமி ரெட்மி 6 மற்றும் போக்கோ எப்1 என அணைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிளிப்கார்ட் நிறுவனம் சியோமி டிவி, சியோமி ஸ்பீக்கர் மற்றும் சியோமி பேண்டு என அனைத்திற்கும் சலுகை வழங்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்பொழுது இந்த "ஐ லவ் எம்.ஐ" விற்பனையில் வெறும் ரூ.12,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.15,999 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்பொழுது இந்த விற்பனையில் வெறும் ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி வொய்2
சியோமி ரெட்மி வொய்2 ஸ்மார்ட்போன் இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்பொழுது இந்த "ஐ லவ் எம்.ஐ" விற்பனையில் வெறும் ரூ.9,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.12,999 விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் கூடுதலாக எக்ஸ்சேன்ஜ் சலுகையில் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

போக்கோ எப்1
போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.20,999 என்ற விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.24,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையில் ரூ. 3,000 வரை போக்கோ போன்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6
சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.7,999 என்ற விலையிலும் மற்றும் அதன் 3 ஜிபி ரேம் உடன் கூடிய 64 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.8,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.12,999 என்ற சலுகையுடன் இந்த ஐ லவ் எம்.ஐ விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.16,999 என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி
இந்த விற்பனையில் சியோமி நிறுவனத்தின் சியோமி மி டிவி 4எ ப்ரோ, சியோமி மி டிவி 4 ப்ரோ, சியோமி மி டிவி 4எக்ஸ் ப்ரோ மற்றும் சியோமி மி எல்.ஈ.டி டிவிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4எ ப்ரோ(43)
அசல் விற்பனை விலை: ரூ.25,999
சலுகை விற்பனை விலை: ரூ.22,999

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4 ப்ரோ(55)
அசல் விற்பனை விலை: ரூ.54,999
சலுகை விற்பனை விலை: ரூ.49,999

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4எக்ஸ் ப்ரோ(55)
அசல் விற்பனை விலை: ரூ.49,999
சலுகை விற்பனை விலை: ரூ.39,999

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4எ(32)
அசல் விற்பனை விலை: ரூ.14,499
சலுகை விற்பனை விலை: ரூ.12,499

சியோமி மி பேண்டு
அத்துடன் சியோமி மி பேண்டு வெறும் ரூ.1,299 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சியோமி இன் மி ஸ்பீக்கர், இயற்போன், பவர் பேங்க் மற்றும் அனைத்து சியோமி தயாரிப்புகளுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








