Home
News

ஃபிளிப்கார்ட் ஆஃபர்: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்,லேப்டாப் மற்றும் பல.!

ஜேபிஎல் சினிமா எஸ்150 ப்ளூடூத் சவுண்ட் பார் சாதனத்திற்கு 57சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சதனத்தை ரூ.24,990-க்கு வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தொடர்ந்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் விலைகுறைப்பு போன்றவை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி வரும் ஏப்ரல் 24-ம் முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை Flipkart Grand Gadget Day sale-எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன், டேப்டாப், கேமரா, வாட்ச் போன்ற பொருட்களுக்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட்: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்,லேப்டாப் மற்றும் பல.!

குறிப்பாக இப்போது சந்தைக்கு வந்துள்ள அதிநவீன கேமரா மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங், எல்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்க விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் சில மின்சாதன பொருட்களுக்கு 70 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜேபிஎல்:

ஜேபிஎல்:

ஜேபிஎல் சினிமா எஸ்150 ப்ளூடூத் சவுண்ட் பார் சாதனத்திற்கு 57சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சதனத்தை
ரூ.24,990-க்கு வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Chromecast மற்றும் DTH செட்- டாப் பாக்ஸ் போன்ற மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

லேப்டாப்:

லேப்டாப்:

ஃபிளிப்கார்ட் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள இந்த சலுகையில் சர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் மாடலை ரூ.36,000-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல், லெனோவா போன்ற நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 டிஎஸ்எல்ஆர் கேமரா:

டிஎஸ்எல்ஆர் கேமரா:

கேனான் மற்றும் நிக்கான் போன்ற நிறுவனங்களின் டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்களுக்கு 25சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவந்து நிக்கான் டி750 டிஎஸ்எல்ஆர் கேமராவை ரூ.1,09,899-விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள், பவர்கேபிள், மைக்ரோ எஸ்டி கார்டுகள், பிரிண்டர்கள், சார்ஜ் கேபிள்கள் போன்ற பல்வேறு சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர்கள்

ஸ்பீக்கர்கள்

சவுண்ட் பார், ஸ்பீக்கர்கள், பூம்பாக்ஸ், 2.1 ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் போன்ற சாதனங்களுக்கு 60 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சாம்சங், சோனி எல்ஜி, ஜேபிஎல் போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்பீக்கர் சாதனங்களுக்கு இந்த 60 சதவீதம் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Grand Gadget Day sale Top offers on Smartphones Laptops and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X