Home
News

Flipkart உணவு டெலிவரி.. புது சேவை ரெடி.. குறைந்த விலையில் உணவா? அப்போ ஸ்விகி, ஸ்மோடோவுக்கு ஆப்பா?

ஸ்விகி (Swiggy), ஸ்மோடோ (Zomato) போல விரைவில் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனமும் கூட உணவு விநியோகம் (Food delivery) செய்யும் சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான, நடவடிக்கைகளை பிளிப்கார்ட் இப்போது சூப்பர் வேகத்தில் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) மூலம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் விரைவில் உணவுகளை ஆர்டர் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, பிரபலமான பிளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனம் உணவு விநியோக சேவைகளை வழங்க ONDC உடன் கூட்டு சேர திட்டமிட்டுள்ளது. இந்த சேவை எப்படி செயல்படும்? இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Flipkart உணவு டெலிவரி.. புது சேவை ரெடி.. குறைந்த விலையில் உணவா?

ONDC மூலம் பிளிப்கார்ட் உணவு டெலிவரி சேவை விரைவில் அறிமுகம் (Flipkart Food Delivery Service Launched Soon by ONDC):

பிளிப்கார்ட் தளத்தில் (Flipkart site) இருந்து வாடிக்கையாளர்கள் இப்போது பல கோடி சாதனங்கள் மற்றும் பொருட்களை வாங்க முடிகிறது. குறிப்பாக, மொபைல் போன்கள் (Mobile phone), கேட்ஜெட்கள் (Gadgets), வீட்டு உபயோக பொருட்கள், மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களை வாங்கி மகிழ்கிறார்கள். இனி விரைவில் Flipkart வழியாக உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களில் இருந்து உணவை ஆர்டர் (food order) செய்து மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவலின் படி, பிளிப்கார்ட் இந்த சேவையை செயல்படுத்த ONDC உடன் தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட் ஆப்ஸ் (Flipkart Apps) மூலம் பயனர்கள் டொமினோஸ் (Dominos), மெக்டொனால்ட்ஸ் (McDonald's) மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்ய முடியும். இந்த ஒத்துழைப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிக உணவு தேர்வுகலை மிகவும் குறைந்த வேளையில் அடைய வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ONDC 2021 இல் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கத்தில் இருந்து, பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் வணிக செயல்பாடுகளை மேம்படுத்த ONDC நெட்வொர்க்கில் இணைந்துள்ளன. ஏப்ரலில், ஓலா ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பயனர்கள் ONDC இயங்குதளத்தைப் பயன்படுத்தி OLA ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்க அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart உணவு டெலிவரி.. புது சேவை ரெடி.. குறைந்த விலையில் உணவா?

ONDC தளத்தைப் பயன்படுத்தி உணவு விநியோகம்.. குறைந்த விலையில் உணவா?

ONDC மூலம் உணவு விநியோகம் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற சேவைகளை இதற்கு முன்பு போன்பே (PhonePe) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் பல்வேறு தலைசிறந்த மற்றும் முன்னணி நிறுவனங்கள் ONDC தளத்தைப் பயன்படுத்தி பல்வேறு சேவைகளை இந்தியா முழுக்க வழங்கி வருகிறது. இந்த வரிசையில், ONDC தளத்தை பயன்படுத்தி உணவு விநியோகம் செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அமேசான் நிறுவனம் கூட ONDC உடன் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டாண்மை மூலம் சிறிய உணவகங்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் அதிக உணவு பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்குமென்று நம்பப்படுகிறது. இதை பிளிப்கார்ட் நிறுவனம் சரியாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. இனி Flipkart பயனர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துகொண்ட ஷாப்பிங் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Food Delivery Online Service Via ONDC Coming Soon In India Check Complete Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X