போட்டி முனைப்பில் மிக மிக மலிவான விலைக்கு கருவிகளை விற்கும் ப்ளிப்கார்ட்.!

|

அமேசான் சலுகைக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ப்ளிப்கார்ட் வலைத்தளம் வருகிற அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும் அதன் 'பெஸ்டிவ் தமாகா டேஸ்' விற்பனையை அறிவித்துள்ளது.

ப்ளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனையில் ​​மொபைல்கள், டிவிகள் மற்றும் உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகைகளிலான தயாரிப்புகளின் மீது சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில் அக்ஸிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு கூடுதல் 10 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

லெனோவா, சாம்சங், ஆப்பிள், சியோமி, மோட்டோரோலா மற்றும் ஒப்போ ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம்பெறுகின்றன. அவைகள் என்னென்ன சாதனம்? அவைகளுக்கு என்னென்ன எக்ஸ்சேன்ஜ் சலுகைகள், தள்ளுபடிகள்.? என்று பார்த்தால்..

சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஆனது ரூ.46,900/-க்கு பதிலாக ரூ.30,990/-க்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.3,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு.

சாம்சங் ஆன் 5 மற்றும் ஆன் 7

சாம்சங் ஆன் 5 மற்றும் ஆன் 7

சாம்சங் ஆன் 5 மற்றும் ஆன் 7 ஆகியவை முறையே ரூ.5,990 /-க்கும் மற்றும் ரூ.6,590/-க்கும் கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போங்களின் உண்மையான விலை ரூ.8,990/- மற்றும் ரூ. 8,490/- என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஆன் மேக்ஸ்

சாம்சங் ஆன் மேக்ஸ்

சாம்சங் ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.1,000/- விலைகுறைப்பு செய்யப்பட்டு தற்போது ரூ.15,900/-க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2,000/- என்ற எக்ஸ்சேன்ஜ் சலுகையும் கிடைக்கும்.

சாம்சங் ஆன் நெக்ஸ்ட், ஜே7-6 மற்றும் ஜே3

சாம்சங் ஆன் நெக்ஸ்ட், ஜே7-6 மற்றும் ஜே3

சாம்சங் ஆன் நெக்ஸ்ட், ஜே7-6 மற்றும் ஜே3 ஆகிய சாதனங்கள் முறையே ரூ.12,900, ரூ.9,490 மற்றும் ரூ.6,990/-க்கு கிடைக்கும். இக்கருவிகள் அசல் விலை ரூ.17,900, ரூ.13,800 மற்றும் ரூ.8,490/- என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மீ நோட் 4

சியோமி ரெட்மீ நோட் 4

சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் மீதான சலுகை நாளை அறிவிக்கபப்டும் மறுகையில் மி மேக்ஸ் 2 மீது ரூ.2,000/- அளவில் விலைகுறைக்கப்ட்டு ரூ.14,999/-க்கு கிடைக்கும் கூடுதலாக ரூ.2000/- எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு

ரெட்மீ 4ஏ மற்றும் மி ஏ1

ரெட்மீ 4ஏ மற்றும் மி ஏ1

மேலும் ரெட்மீ 4ஏ மற்றும் மி ஏ1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீதான ஃப்ளாஷ் விற்பனையை அக்டோபர் 5 நள்ளிரவு 5 மணிக்கு ப்ளிப்கார்ட் நடத்தஉள்ளது. இதில் ரெட்மீ 4ஏ ரூ.6,999/-க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இ4 பிளஸ், மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ சி பிளஸ்

மோட்டோ இ4 பிளஸ், மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ சி பிளஸ்

மோட்டோ இ4 பிளஸ், இந்தியாவில் ரூ 9,999/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விற்பனையில் ரூ.9,599/-க்கு கிடைக்கும். மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ சி பிளஸ் ஆகியவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.5,999/-க்கு கிடைக்கும். இக்கருவிகள் அசல் விலை ரூ.16,999/- மற்றும் ரூ.6,999/- என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இசெட் பிளே மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே

மோட்டோ இசெட் பிளே மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே

மோட்டோ இசெட் பிளே மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே ஆகிய கருவிகளுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். அதாவது அவைகள் முறையே ரூ.21,999/- மற்றும் ரூ.24,999/-க்கு கிடைக்கும். மோட்டோ இசெட் (4ஜிபி) ஆனது ரூ.19,999/-க்கு கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.39,999/- ஆகும்.

லெனோவா கே6 பவர், கே8 பிளஸ்

லெனோவா கே6 பவர், கே8 பிளஸ்

ரூ.9,999/- அறிவிக்கப்பட்ட லெனோவா கே6 பவர் தற்போது ரூ.8,499/-க்கு கிடைக்கும். லெனோவா கே8 பிளஸ் மீதான சலுகை விற்பனையின் போது அறிவிக்கப்படும்.

ஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ்

ஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ்

ஹானர் 8 ப்ரோ கருவி ரூ.3,000/- சலுகை பெற்று ரூ.26,999/-க்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.13,000/- அளவிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு. ஹூவாய் ஹானர் 6எக்ஸ் கருவி ரூ.1,000/- சலுகை பெற்று ரூ.10,999/-க்கு கிடைக்கும்.

ஒப்போ எப்3 மற்றும் ஒப்போ எப்3 பிளஸ்

ஒப்போ எப்3 மற்றும் ஒப்போ எப்3 பிளஸ்

ஒப்போ எப்3 மற்றும் ஒப்போ எப்3 பிளஸ் முறையே ரூ.15,990/-க்கும் மற்றும் ரூ. 19,990/-க்கும் கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.19,990 மற்றும் ரூ.30,990/- ஆகும்.

Best Mobiles in India

English summary
Flipkart Festive Dhamaka Days sale: Top deals on Redmi Note 4, Apple iPhone, and more phones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X