Home
News

பழைய டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இருக்கா? ஃபிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ரெடி!

உங்களது வீட்டில் இருக்கும் பழைய டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளவும் அல்லது அந்த பொருட்களோடு கூடுதல் பணம் கொடுத்து புதியதை வாங்கிக்கொள்ளும் வகையிலும் ஃபிளிப்கார்ட் (Flipkart) அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.

பொதுவாக வீட்டு உபயோகப்பொருட்களில் டிவி (TV), பிரிட்ஜ் (Refrigerator), வாஷிங் மெஷின் (Washing Machine), ஏசி (Air Conditioner) ஆகியவையே மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும். ஆகவே, இவற்றை அடிக்கடி சுத்தம் செய்தும், பராமரித்தும் வர வேண்டியது, அவசியமாகும். இருப்பினும், சில நேரங்களில் அவை பழுதடைந்து கிடக்கும் அல்லது பயன்படுத்த தேவை ஏற்படாத சூழலும் இருக்கும்.

பழைய டிவி, பிரிட்ஜ் இருக்கா? ஃபிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இருக்கு!

எப்போதாவது, தேவைப்படும் என்று பயன்படுத்தவில்லை என்றாலும், அவற்றை வீட்டிலேயே வைத்திருக்கும் மக்களையும் இங்கு பார்க்க முடியும். அப்படி யாராவது வைத்திருந்தால், அவை முற்றிலும் பயன்படுத்த முடியாமல் போவதற்குள் நியாமான விலைக்கு எக்ஸ்சேஞ்ச் நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அதுவும், ஃபிளிப்கார்ட் போன்ற நம்பகமான நிறுவனமே நேரடியாக எக்ஸ்சேஞ்சில் களமிறங்கி இருப்பதால், மிஸ் செய்துவிட்டால், திரும்ப கிடைக்காது.

இந்த ஆஃபரை எப்படி பெறுவது?: பொதுவாக பிளிப்கார்டில் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது, லேப்டாப், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களை எப்படி எக்ஸ்சேஞ்ச் செய்வோமோ அதுபோலவே வீட்டு உபயோகப் பொருட்களையும் செய்துகொள்ள முடியும்.

அதாவது, எதாவது ஒரு பிராண்ட்டில் டிவி அல்லது பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்றால் அதை ஆர்டர் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் விலைக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃப்சனை பயன்படுத்தினால், உங்களிடம் இருக்கும் அதே பிராண்டின் பழைய பொருட்களின் விவரங்கள் கேட்கப்படும். அதில், அந்த பொருள் எந்த ஆண்டு வாங்கப்பட்டது? அதன் மாடல் என்ன? உள்ளிட்டவை அடங்கும்.

இதையெல்லாம் கொடுத்த பின்பு, பிளிப்கார்ட் நிறுவனமே ஒரு விலையை நிர்ணயித்து உங்களுக்கு காண்பிக்கும். இந்த விலை உங்களுக்கு ஏற்ப இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை பழைய பொருளின் விலையைவிட நீங்க வாங்க விரும்பும் பொருளின் விலை அதிகமான இருந்தால், கூடுதலாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஆஃபரில் உங்களது பழைய பொருட்கள் வேலை செய்யாமல் இருந்தால் கூட எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Exchange Program And Offers Help To Sell, Exchange Old Phones, TV, Refrigerator, Washing Machine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X