அடித்தது அதிர்ஷ்டம்- எல்லா ஸ்மார்ட்போனும் ரூ.15,000 மட்டுமே: Flipkart எலெக்ட்ரானிக்ஸ் சேல்!

|

ஏணைய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இருப்பினும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனி வரவேற்பு இருக்கும். அந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனே தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்றால் கூடுதல் மகிழ்ச்சி தானே. இந்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

அமோக வரவேற்பில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்

அமோக வரவேற்பில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்

மிட்ரேன்ஜ், பிளாக்ஷிப், ப்ரீமியம் என பல விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு எப்போதும் கூடுதல் வரவேற்பு இருக்கும். பல பிராண்டுகள் இந்த விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. தற்போது பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் ரூ.15,000 க்கு கீழான ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியை பெறுகின்றன.

பட்டியலில் உள்ள முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள்

பட்டியலில் உள்ள முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள்

இந்த பட்டியலில் Realme, Redmi, Poco, Motorola உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை விவரமாக பார்க்கலாம்.

அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. உதாரணமாக மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.13,999 என கிடைக்கிறது. அதேபோல் ரூ.15,000 க்கு மேல் விற்கப்பட்ட ஸ்மார்ட்போனும் தள்ளுபடியின் மூலம் ரூ.15,000 க்கு கீழ் கிடைக்கிறது. அதாவது 5ஜி ஆதரவோடு கூடிய Samsung Galaxy F23 பிளிப்கார்ட்டில் ரூ.14,999 க்கு கிடைக்கிறது.

சாம்சங், ரியல்மி, மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்

சாம்சங், ரியல்மி, மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனையில் Samsung Galaxy F22 மற்றும் Galaxy F12 ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் ரியல்மி நிறுவனத்தின் Realme C35, Realme Narzo 50A மற்றும் Realme Narzo 50 ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.13,499 க்கு கிடைக்கிறது.

மோட்டோரோலா ஜி42

மோட்டோரோலா ஜி42

MOTOROLA G42 ஸ்மார்ட்போனானது அட்லான்டிக் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 17% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி சி35

ரியல்மி சி35

Realme C35 ஸ்மார்ட்போனானது க்ளோயிங் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 14% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

SAMSUNG Galaxy F23 5G ஸ்மார்ட்போனானது அக்வா ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 5ஜி ஆதரவோடு கூடிய இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.23,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 37% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனானது கிராஃபைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.18,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவோடு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 26% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

Redmi Note 10S ஸ்மார்ட்போனானது டீப் சீ ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.18,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனானது கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.14,999 என கிடைக்கிறது. 5ஜி ஆதரவோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோட்டோரோலா ஜி60

மோட்டோரோலா ஜி60

Motorola G60 ஸ்மார்ட்போனானது மூன்லெஸ் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.21,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 31% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்22

சாம்சங் கேலக்ஸி எஃப்22

Samsung Galaxy F22 ஸ்மார்ட்போனானது டெனிம் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.12,999 என கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆதரவோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 26% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி நார்சோ 50ஏ

ரியல்மி நார்சோ 50ஏ

Realme Narzo 50A ஸ்மார்ட்போனானது ஆக்ஸிஜன் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.12,499 என கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆதரவோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

Micromax IN Note 2 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Electronics Sale: Rs.15000 Smartphones Available with Huge Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X