லக்கு இருந்தால் iPhone 14 போனை வெறும் ரூ.17,000 விலைக்கு வாங்கலாம்.. எங்கே? எப்படி இதை வாங்குவது?
ஐபோன் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபோன் 14 (iPhone 14) ஸ்மார்ட்போனை வெறும் ரூ.30,000 விலைக்கும் குறைவான விலையியல் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எப்படி இந்த விலையில் ஐபோன் 14 ஐ வாங்குவதென்று பார்க்கலாம் வாங்க.
பிளிப்கார்ட் (Flipkart) தனது பிலிகார்ட் தசரா சேல் 2023 (Flipkart Dusshera Sale 2023) விற்பனையை அக்டோபர் 22, 2023 அன்று தொடங்கியுள்ளது. இது அக்டோபர் 29, 2023 வரை நடைபெற உள்ளது. இந்த விற்பனையானது ஆடைகள், கேஜெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல பொருட்கள் உட்பட பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது.

புதிய ஐபோன் வாங்குவதற்கு இந்த விற்பனையை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஏனெனில் Flipkart தற்போது iPhone 14 ஐ வெறும் ரூ.30,000 கிடைக்கும்படி செய்துள்ளது. இதில் அணைத்து விதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் உட்படுத்தப்பட்டுள்ளது. சரி, இப்போது எவ்வாறு இந்த சலுகைகள் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது ஆப்பிள் ஐபோன் 14 ஐ கவர்ச்சிகரமான விலையாக ரூ. 56,999 என்ற விலைக்கு வழங்குகிறது. இது அதிகாரப்பூர்வ ஸ்டோர் விலையில் இருந்து ஈர்க்கக்கூடிய ரூ.12,901 என்ற சலுகை விலை குறைப்புடன் வருகிறது. இதில் சிறப்பானது என்னவென்றால், SBI, RBL வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 750 கூடுதல் தள்ளுபடியை பெற்றுள்ளது.
இது ஐபோன் 14 இன் விலையை கவர்ச்சிகரமான ரூ.56,249 ஆகக் குறைக்க உதவுகிறது. பிளிப்கார்ட் வழங்கும் சலுகைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. பிளிப்கார்ட் (Flipkart) ஒரு தாராளமான சலுகைகை சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குகிறது. பிளிப்கார்ட் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகையை வழங்கியுள்ளது.
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றும்போது ரூ.39,150 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த நம்பமுடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அனைத்தையும் இணைத்து, நீங்கள் இப்போது ஆப்பிள் ஐபோன் 14 ஐ நம்பமுடியாத விலையான ரூ.17,099 என்ற நம்ப முடியாத விலைக்கு Flipkart விற்பனையின் போது வாங்கலாம்.
ஆப்பிளின் கைபேசியானது 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பக விருப்பங்களுடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த Apple A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் 14 இன் பல வண்ண வகைகளில் இருந்து வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம். இவை மிட்நைட், பர்பிள், ஸ்டார்லைட், ப்ராடக்ட் ரெட், ப்ளூ மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
ஐபோன் 14 ஸ்மார்ட்போன் சாதனம் கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 12MP பிரைமரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது 12MP அல்ட்ரா வைட் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 14 சாதனத்தின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
ஐபோன் 14 சாதனம் 2532 x 1170 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட மிகவும் தெளிவான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செராமிக் கோட்டிங் பாதுகாப்புடன் வருகிறது. ஐபோன் 14 சாதனத்தை வாங்க விரும்புவார்கள் இந்த சலுகையை மிஸ் செய்யாதீர்கள். பழைய ஐபோன் 13 அல்லது ஐபோன் 12 போன்ற சாதனங்களை எக்ஸ்சேஞ் செய்யும் பொழுது கூடுதல் எக்சேஞ் சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








