மீண்டும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி: பிளிப்கார்ட் தசரா விற்பனை அறிவிப்பு!

|

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை முடிந்த நிலையில் தற்போது தசரா ஸ்பெஷல் விற்பனையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனையானது இன்று தொடங்கி அக்டோபர் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளோடு ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை முடிவுற்றாலும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஒரு மாதத்திற்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தசரா ஸ்பெஷல் விற்பனை

பிளிப்கார்ட் தசரா ஸ்பெஷல் விற்பனை

இந்தநிலையில் பிளிப்கார்ட் தசரா ஸ்பெஷல் விற்பனையை அறிவித்து மீண்டும் தள்ளுபடி மற்றும் சலுகையோடு கூடிய விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த புதிய விற்பனையானது இன்று தொடங்கி அக்டோபர் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலிவான இஎம்ஐ விருப்பங்கள், பரிமாற்ற தள்ளுபடிகள் மற்றும் முழு மொபைல் பாதுகாப்பு போன்ற சிறந்த ஒப்பந்தங்களை பிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது.

உடனடி 10% தள்ளுபடி

உடனடி 10% தள்ளுபடி

இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக 10% தள்ளுபடியை வழங்க கோட்டக் மஹேந்திரா வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கியுடன் பிளிப்கார்ட் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் ரியல்மி சி 3, ஐபோன் எஸ்இ(2020), ஐபோன் 11 ப்ரோ மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் போன்ற ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

ஐபோன் 11 ப்ரோ தள்ளுபடி

ஐபோன் 11 ப்ரோ தள்ளுபடி

ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் தசரா விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் ரூ.79,999-க்கு வழங்கப்படுகிறது. ஐபோன் 11 ப்ரோவின் அதிகாரப்பூர்வ விலையான ரூ.1,06,600 இலிருந்து ரூ.26,601 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடிப்படை மாடலான ஐபோன் எஸ்இ(2020) ரூ.34,999 என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோனின் அதிகாரப்பூர்வ விலை ரூ.42,500 ஆகும். கூடுதலாக, பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனுக்கு மாதத்திற்கு ரூ.4,334 என்ற இஎம்ஐ விருப்பத்தில் வாங்க அனுமதிக்கிறது. ஐபோன் எஸ்இ 2020 128 ஜிபி பிளிப்கார்ட்டில் ரூ.39,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

61 வயது முதியவரின் உயிரை காத்த ஆப்பிள் வாட்ச்.! நடந்தது இதுதான்.!

ரியல்மி சி3 தள்ளுபடி

ரியல்மி சி3 தள்ளுபடி

ஆப்பிள் தவிர, மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ரியல்மி சி3 மாடலுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரியல்மி சி3 3ஜிபி + 32ஜிபி மாடலின் விலை ரூ.7,999 ஆகவும் 4ஜிபி + 64ஜிபி மாடலின் விலை ரூ.8,999 ஆகவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போகா எம் 2 தசரா சிறப்பு விற்பனை

போகா எம் 2 தசரா சிறப்பு விற்பனை

போகா எம் 2 தசரா சிறப்பு விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் ரூ.1,000 தள்ளுபடி பெறுகிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடலுக்கான அசல் விலை ரூ.12,499-ல் இருந்து ரூ.11,499 என குறைக்கப்பட்டு பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. 6ஜிபி + 64ஜிபி மாடலுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்பட்டு இதன் விலை ரூ.10,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ

ரியல்மி நார்சோ 20 ப்ரோ

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ப்ரீபெய்ட் பயனர்கள் அல்லது எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்குபவர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை 6ஜிபி + 64ஜிபி மாடலுக்கு ரூ.13,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி மாடலுக்கு ரூ.15,999 ஆகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20

சாம்சங் கேலக்ஸி எஸ் 20

ப்ரீமியம் மாடல் பயனர்களுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 20, 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.49,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் மாதத்திற்கு ரூ.5,556 என்ற முறையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதேபோல், சாம்சங் கேலக்ஸி நோட் 10+ 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.59,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நோகாஸ்ட் இஎம்ஐயாக மாதத்திற்கு ரூ.6,667 என்ற முறையில் வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Dussehra Special Sale Announced With Exciting Offers For Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X