கனவு விலைக்கு ஐபோன் 13.. அக்.5 முதல் Flipkart-இன் அடுத்த விற்பனை!

|

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) சைலன்ட் ஆக அதன் அடுத்த சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அது பிக் தசரா சேல் 2022 என்கிற பெயரின் கீழ் நடக்கும்.

பிளிப்கார்ட்டின் இந்த ஸ்பெஷல் சேல் ஆனது எப்போது தொடங்கி எப்போது முடியும்? இதன் கீழ் என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எப்போது தொடங்கி எப்போது முடியும்?

எப்போது தொடங்கி எப்போது முடியும்?

பிளிப்கார்ட்டின் பிக் தசரா சேல் 2022 ஆனது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

அதாவது இந்த விற்பனை மொத்தம் 4 நாட்களுக்கு நடக்கும் என்று அர்த்தம். இதற்கு போட்டியாக அமேசான் வலைத்தளம் ஏதேனும் ஒரு சிறப்பு விற்பனையை அறிவிக்குமா? என்பது தொடர்பான எந்த தகவலும், தற்போது வரை வெளியாகவில்லை!

Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!

Flipkart தசரா சேலில்.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

Flipkart தசரா சேலில்.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

பிளிப்கார்ட்டின் 2022 தசரா விற்பனையின் போது, ஐபோன் 13 மீது "இதுவரை அறிவிக்கப்படாத தள்ளுபடி" உட்பட பல ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் அணுக கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து லேப்டாப்கள், இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் வீட்டு உபயோகப் பொருட்கள் மீதும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்!

iPhone 13 மீது.. அப்படி என்ன தள்ளுபடி?

iPhone 13 மீது.. அப்படி என்ன தள்ளுபடி?

பிளிப்கார்ட்டின் தசரா விற்பனையின் போது - ​​மீண்டும் ஒருமுறை - ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ஆனது இதுவரை இல்லாத அளவிலான குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் சரியான தள்ளுபடி விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை!

எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!

ஐபோன் 13 மட்டும் தானா?

ஐபோன் 13 மட்டும் தானா?

ஐபோன் 13 மாடலை தவிர, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a மாடலும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​கூகுள் பிக்சல் 6a ஆனது அதன் குறைந்தபட்ச விலையான ரூ.27,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

வேறு எந்தெந்த நிறுவனங்களின் மொபைல்கள் மீது ஆபர் இருக்கும்?

வேறு எந்தெந்த நிறுவனங்களின் மொபைல்கள் மீது ஆபர் இருக்கும்?

Flipkart தளமானது, இந்த தசரா விற்பனையின் போது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற அனைத்து விவரங்களையும் வெளியிடவில்லை.

ஆனால் வரவிருக்கும் சிறப்பு விற்பனைக்காக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்த விற்பனையின் கீழ் - ஆப்பிள், சாம்சங், ரியல்மி, விவோ, ஒப்போ மற்றும் பிற உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே ஆபரா?

ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே ஆபரா?

இல்லை! பிளிப்கார்ட்டின் பிக் தசரா விற்பனையின் போது, டேப்லெட்டுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும் இந்த விற்பனையின் போது பிரிண்டர்கள், மானிட்டர்கள் மற்றும் பிற பொருட்களுக்கு சுமார் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்ஃபோன்களின் விலையில் 80 சதவீதம் வரை குறைக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளின் மீது 80 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியும், டிவிகள் மீது 75 சதவிகிதம் வரை தள்ளுபடியும் அணுக கிடைக்கும்.

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

வழக்கம் போல.. வங்கி சலுகைகளும் உண்டா?

வழக்கம் போல.. வங்கி சலுகைகளும் உண்டா?

ஆம்! வழக்கம் போல இந்த பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையின் போதும் கூட கிரெடிட் கார்டுகள் மீதான பிரத்யேக சலுகைகள் இருக்கும்.

பிளிப்கார்ட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, HDFC பேங்க் கார்டு வழியாக முன்பணம் செலுத்துதல் மற்றும் தவணைகள் ஆகிய இரண்டிலுமே 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் பிளிப்கார்ட்டின் பே லேட்டர் சேவையை பயன்படுத்தும் பட்சத்தில், அந்தந்த தயாரிப்புகளுக்கு ஏற்ற சில சலுகைகளும் அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Flipkart Dussehra Sale 2022 Starts October 5 Check iPhone 13 and HDFC Bank Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X