இறுதி சுற்று.. கம்மி விலையில் Nothing, Apple, பிக்சல் போனுக்கு ஓனராக கடைசி வாய்ப்பு!

|

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2022 கோலாகலமாக நடந்து வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் வங்கி மற்றும் ஆக்சிஸ் வாங்கி கார்ட்கள் பயன்படுத்தி இந்த விற்பனை தினங்களில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1250 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுமட்டுமில்லை கூடுதலாக பல்வேறு தள்ளுபடிகள் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. நத்திங், ஆப்பிள், கூகுள் பிக்சல் போன்ற ப்ரீமியம் போன்களை மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் வாங்கலாம்.

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2022

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2022

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2022 ஆனது இன்றுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் நீண்ட காலமாக தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது.

பிளிப்கார்ட்டின் தள்ளுபடியானது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் தொடங்கி தீபாவளி சலுகை என தொடர்ந்து நீண்ட காலமாக நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக நடந்த பிளிப்கார்ட் இன் பண்டிகை கால சலுகையானது இன்றுடன் முடிவடைகிறது.

எனவே புது ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இப்போதே ஆர்டர் போடவும்.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் விலையில் வாங்கலாம்

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் விலையில் வாங்கலாம்

ஸ்மார்ட்போன் வாங்குவது என முடிவு செய்துவிட்டால் சற்று விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

பிளிப்கார்ட் இல் நத்திங் போன், மோட்டோரோலா, சாம்சங், கூகுள் பிக்சல் போன்ற விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களும் மிட் ரேன்ஜ் விலையில் கிடைக்கிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகள் பயன்படுத்தி எந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் ரூ.1250 தள்ளுபடி நிச்சயமாக வழங்கப்படும்.

Nothing Phone 1

Nothing Phone 1

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்று நத்திங் போன் 1. இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. அனைத்து தள்ளுபடிகளுடனும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.26,749 என வாங்கலாம். சமீபத்தில் அறிமுகமாகி உடனே விலை உயர்வை பெற்றது இந்த ஸ்மார்ட்போன். குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வாங்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது.

Apple iPhone 13

Apple iPhone 13

ஆப்பிள் ஐபோன் 13 இன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் பிளிப்கார்ட்டில் ரூ.59,999 என கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த ஐபோனை வாங்கினால் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Moto g72

Moto g72

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது.

வங்கி சலுகைகள் மற்றும் தீபாவளி விற்பனை சலுகைகளை பயன்படுத்தி ரூ.14,749 என இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Samsung S21 FE 5G

Samsung S21 FE 5G

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஆனது ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போனாகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் பிளிப்கார்ட் விற்பனை 2022 இல் ரூ.35,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதல் தள்ளுபடி மற்றும் வங்கிச் சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.32,999 என வாங்கலாம்.

Google pixel 6a

Google pixel 6a

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் பிளிப்கார்ட்டில் ரூ.34,199 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ மற்றும் கோடக் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் ரூ.27,999 என இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஸ்மார்ட்போன் வாங்க இதுவே சரியான நேரம்

ஸ்மார்ட்போன் வாங்க இதுவே சரியான நேரம்

பரிமாற்ற சலுகைகள் உட்பட கூடுதல் சலுகைகளும் இந்த தள்ளுபடி தின விற்பனையில் கிடைக்கிறது. இந்த விலை தற்காலிகமாகவே பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மாற்றம் இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

Best Mobiles in India

English summary
Flipkart Diwali Sale 2022: Nothing, Apple, Samsung, Google Smartphones Get Massive Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X