சரவெடி தீபாவளி.. யோசிக்கவே வேணாம்! Samsung Flip போனுக்கு இதைவிட தள்ளுபடி கொடுக்க முடியாது!

|

ரொம்ப வருஷமா ஸ்மார்ட்போன் யூஸ் பண்றோம். புதுப்புது அம்சங்கள் வருதே தவிர வடிவமைப்பு அப்படியே தானப்பா இருக்கு ஒரு மாற்றமும் இல்லையே. சதுரமான தோற்றம் முன்னாடி டிஸ்ப்ளே, பின்னாடி கேமரா கம்பெனி பெயர் மட்டும் வேறவேற. அம்சங்கள் மாறுதே தவிர வடிவமைப்பு அப்படியேதான் இருக்கு என்று சிந்திக்கும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க அறிமுகமான ஸ்மார்போன்கள் தான் போல்டபிள் மற்றும் ஃப்ளிப் மாடல்கள் ஆகும்.

தள்ளுபடி விலையில் ஃபோல்டபிள் மாடல்

தள்ளுபடி விலையில் ஃபோல்டபிள் மாடல்

ஃபோல்டபிள் மாடலை டிஸ்ப்ளே உடன் அப்படியே புத்தகம் போல் மடிக்கலாம். ஃப்ளிப் மாடலை அப்படியே மேல் இருந்து கீழ் புறத்தில் டிஸ்ப்ளே உடன் மடிக்கலாம்.

பல்வேறு நிறுவனங்களும் ஃபோல்டபிள் மாடல்களை அறிமுகம் செய்து வந்தாலும் இந்த பிரிவில் மிகவும் புகழ் பெற்றது சாம்சங் தான்.

சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் மாடல்கள் சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகமானது. உச்ச விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட்டில் பிக் தீபாவளி விற்பனை தற்போது நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையில் ஆப்பிள், சாம்சங், சியோமி, ரெட்மி உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பண்டிகை தின அறிவிப்பின் சிறந்த சலுகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 இருக்கிறது.

Samsung Galaxy Z Flip 3 தள்ளுபடி

Samsung Galaxy Z Flip 3 தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.5000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.59,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.5000 தள்ளுபடியுடன் ரூ.54,999 என கிடைக்கிறது.

Samsung Galaxy Z Fold 3 தள்ளுபடி

Samsung Galaxy Z Fold 3 தள்ளுபடி

Samsung Galaxy Z Fold 3 ஆனது அமேசானில் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.1,54,999 என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,19,999 என கிடைக்கிறது. கூடுதலாக ரூ.10,000 வங்கித் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனை ரூ.1,09,999 என வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 இரண்டு அமோலெட் காட்சிகளை கொண்டுள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளே 7.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இருக்கிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி உள்ளது.

புகைப்படங்களை பதிவு செய்ய 12 எம்பி பின்புற கேமரா அமைப்பும், வெளிப்புற காட்சியில் 10 லென்ஸ் மற்றும் டிஸ்ப்ளே ஷூட்டர் கூழ் 4 எம்பி கேமரா உள்ளது. எஸ் பென் ஆதரவும் இதில் கிடைக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதி

Samsung Galaxy Z Fold 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனை இரண்டாக டிஸ்ப்ளே உடன் மடிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான UI 4.1 மூலம் இயங்குகிறது.

இதில் 7.6 இன்ச் பிரைமரி QXGA+ (2,208x1,768 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 6.2-இன்ச் HD+ (832x2,268 பிக்சல்கள்) டைனமிக் 2X0 டிஸ்ப்ளே ஆனது கவர் டிஸ்ப்ளே ஆக செயல்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி ரேம் ஆதரவு உள்ளது.

10 எம்பி செல்பி கேமரா

Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 10 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவில் 4 எம்பி அண்டர் டிஸ்ப்ளே கேமரா இடம்பெற்றுள்ளது.

4400 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி

4400 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் மற்றும் 25 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4400 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் இதுவாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம்.

Best Mobiles in India

English summary
Flipkart Diwali Offer: Samsung Galaxy Z Flip 3 available for sale at amazing prices

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X