Subscribe to Gizbot

ப்ளிப்கார்ட்டின் மிகப்பெரிய 2 அறிவிப்புகள்; என்னவாக இருக்கும்.?

Written By:

பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து, எதோ ஒரு பெரிய அறிவிப்பு வெளியாகும் என்பது போல் தெரிகிறது. அந்த அறிவிப்பானது இன்றைய தேதி வரையிலாக நாம் ஸ்மார்ட்போன் வாங்கும் மற்றும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் வழியை மாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சமூக வலைப்பின்னல் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலானது, உள்நாட்டில் சந்தையை மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளிலும் ஒரு சிறிய ஆர்வத்தை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவாக இருக்கும்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு குறுகிய வீடியோ.!

ஒரு குறுகிய வீடியோ.!

ஆன்லைன் விற்பனை என்கிற விளையாட்டின் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படும் இந்த அறிவிப்பின் எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கும் வண்ணம் வெளியான வீடியோவில் "விரைவில் 2 பெரிய அறிவிப்புகள்" என்கிற வாசகமும் காட்சிப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு சார்ந்த விளக்கத்தை, ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கல்யாண் கிருஷ்ணமூர்த்தி (ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பின்னலில்) ஒரு குறுகிய வீடியோவாக வெளியிட்டு பேசியுள்ளார்.

ஒரு பிரத்யேக கூட்டு.!

ஒரு பிரத்யேக கூட்டு.!

திரு. கல்யாணின் வார்த்தைகளின் படி சென்றால் " இந்த புதிய அறிவிப்புகள் எவ்வளவு பெரியது என்பதை அறிய, உணர நாம் ஒரு முறையேனும் அவற்றை கடந்து செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்". வெளியான வீடியோவை உற்று நோக்குகையில், இந்திய நிறுவனமான ப்ளிப்கார்ட் ஒரு மாபெரும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒரு பிரத்யேக கூட்டு வைக்கும் என்பதையும், அது சார்ந்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ப்ளிப்கார்ட் தளத்தின் மின்வணிக மேடையில் "பிக் கம்மிங் சூன்" என்று காட்சிப்பட்ட ஒரு விளம்பர டீஸரில் இருந்து தான். இந்த அத்துணை எதிர்பார்ப்பும் ஒரு காட்டுத்தீ போல் பரவியது. அதன் விளைவாக ட்வீட்டர் போன்ற ஆன்லைன் சமூக வலைதளங்களில் ப்ளிப்கார்டின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்கிற பெரும் உற்சாகமும், விவாதமும் கிளம்பியது.

ஹூவாய், ஒன்ப்ளஸ் அல்லது சியோமி ஆக இருக்கலாம்.!

ஹூவாய், ஒன்ப்ளஸ் அல்லது சியோமி ஆக இருக்கலாம்.!

அம்மாதிரியான விவாதங்களின் வழியாகத்தான், ப்ளிப்கார்ட் ஆனது ஒரு முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுடன் ஒரு பிரத்தியேக கூட்டணி அமைக்கும் என்றும் அது சார்ந்த அறிவிப்பு தான் இது என்றும் யூகங்கள் கிளம்பின. இன்னும் சொல்லப்போனால் அந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹூவாய், ஒன்ப்ளஸ் அல்லது சியோமி ஆக இருக்கலாம்.

இதில் எந்த நிறுவனத்துடன் கூட்டணி கொண்டாலும் அது இந்திய பயனர்களுக்கு லாபமாக தான் இருக்கும். குறிப்பாக கூட்டணியை கொள்ளும் நிறுவனத்தின் பிரதான மற்றும் முதன்மை ஸ்மார்ட்போன்கள், உலகலாவிய அறிமுகத்தை தொடர்ந்து மிக விரைவாக இந்திய சந்தையை, ப்ளிப்கார்ட் தளம் வழியாக எட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் மட்டும் நில்லாது.?

ஒரு ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் மட்டும் நில்லாது.?

அத்துடன் சேர்த்து ப்ளிப்கார்ட்டின் இந்த பிரத்யேக கூட்டு ஆனது, நுகர்வோர்களுக்கு இன்னும் பல சிறந்த சலுகைகளை வழங்கவும் அனுமதிக்கும். இப்படியாக வெளியான டீஸர் ஆனது பல சாத்தியக்கூறுகளை ஆராயும் நிலைப்பாட்டை உருவாக்கி விட்டுள்ளது. மற்றொரு யூகத்தின் படி, இந்த கூட்டணி ஒரு ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் மட்டும் நில்லாது, இரண்டு பிராண்ட் உடன் நிகழலாம். அதாவது, இரண்டாவது கூட்டணியானது ஒன்ப்ளஸ் அல்லது கூகுள் உடன் இருக்கலாம்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
முற்றிலும் புதிய மற்றும் உற்சாகமான ஏதோ ஒன்றை ப்ளிப்கார்ட் வெளிப்படுத்த உள்ளது.!

முற்றிலும் புதிய மற்றும் உற்சாகமான ஏதோ ஒன்றை ப்ளிப்கார்ட் வெளிப்படுத்த உள்ளது.!

எல்லாவற்றிக்கும் மேலான ஆர்வத்தை தூண்டியது பிட்காயின் சார்ந்த ப்ளிப்கார்ட்டின் விளம்பரம் தான். எப்போதுமே புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ப்ளிப்கார்ட்டின் இந்த வரவிருக்கும் க்ரிப்டோகரன்சி செயல்முறையானது சந்தையில் உள்ள போட்டியை இன்னும் திவீரப்படுத்தும் என்பது உறுதி. இருப்பினும், தற்போதைய இந்திய நிதிச் சந்தையியல் இயக்கங்களைப் பார்த்தால், அத்தகைய நிலப்பரப்புக்குள் ப்ளிப்கார்ட் நுழைவதற்கு மிகவும் குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன.

#BigOnFlipkart என்கிற பிரச்சாரமானது ப்ளிப்கார்ட்டின் பேஸ்புக், ட்வீட்டர், யூட்யூப் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் தளங்களில் தற்போது செயலில் உள்ளது. முற்றிலும் புதிய மற்றும் உற்சாகமான ஏதோ ஒன்றை ப்ளிப்கார்ட் வெளிப்படுத்த உள்ளது என்பது மட்டும் உறுதி. அந்த அறிவிப்பு இன்று (ஏப்ரல் 17, 2018), ப்ளிப்கார்ட் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Flipkart to disrupt Indian smartphone landscape with a big announcement on April 17. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot