'மாங்காய்' அனுப்பி வைத்த ப்ளிப்கார்ட்..!

Written By:

செங்கல், மரக்கட்டைகளை அனுப்பி அனுப்பி, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு 'போர்' அடித்து விட்டது போலும். வித்தியாசமாக ஏதாவது அனுப்ப வேண்டும் என்று பிளான் பண்ணி, இந்த முறை 2 மாங்காய்களை அனுப்பி உள்ளது..!

இது போன்ற விஷயங்கள் ஒன்றும் புத்தம் புதியது அல்ல. ஆனால், ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு 2 மாங்காய்களை அனுப்பி வைத்துள்ளது, ஆன்லைன் ஷாப்பிங் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..!

'மாங்காய்' அனுப்பி வைத்த ப்ளிப்கார்ட்..!

கடந்த ப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் மெகா சேல் அன்று, ரூபாய் 8099 /- மதிப்புள்ள ஒரு அஸுஸ் சென்போன் 5 ஒன்றை ஆர்டர் செய்தார், தெலுங்கானாவை சேர்ந்த சூருச்சரண், அவருக்கு வந்து சேர்ந்ததோ 2 மாங்காய்கள்.

'மாங்காய்' அனுப்பி வைத்த ப்ளிப்கார்ட்..!

அதிர்ந்து போய் இந்த விடயத்தை பற்றி சூருச்சரண், ப்ளிப்கார்ட் கஸ்டமர் சர்வீஸ் குழுவிடம் புகார் அளிக்க, அவரின் ஆர்டர் நம்பரை வைத்து உறுதி செய்து, 24 மணி நேரத்தில் அவர் பணத்தை திரும்பி தருவோம் என்று முதலில் உறுதி அளித்த ப்ளிப்கார்ட், பின் உங்கள் ஆர்டர் 'கேன்சல்' செய்யப்பட்டு விட்டது, ரிட்டன்ஸ் பாலிசிபடி இது செல்லாது, அது, இது என்று காரணம் சொல்லி பணத்தை திரும்ப தரவே இல்லையாம்..!

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

'மாங்காய்' அனுப்பி வைத்த ப்ளிப்கார்ட்..!

இப்பிடியே போனா... அடுத்தமுறை அல்வா கொடுத்தாலும் கொடுப்பாங்க, எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே..!

Read more about:
English summary
Flipkart Allegedly Delivers Mangoes Instead Of Phone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot