ரூ.50,000 வரை குறையும் iPhone 13 விலை.. இந்த தேதி நோட் பண்ணிக்கோங்க!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது செப்டம்பர் 23 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பிளிப்கார்ட் பல்வேறு கேட்ஜெட்களுக்கும் அதீத தள்ளுபடிகளை அறிவிக்க இருக்கிறது.

உறுதி செய்த பிளிப்கார்ட்
மறுபுறம் இதே காலக்கட்டத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்த இருக்கிறது. இரண்டு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிக்க இருக்கிறது.
இரண்டு நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் தள்ளுபடிகள் அறிவிக்க இருக்கும் காரணத்தால் சலுகை குறித்த விவரங்கள் ரகசியமாகவே இருந்தது.
இந்த நிலையில் பிளிப்கார்ட் ஓரிரு தகவலை சமீபத்திய நாட்களாக வெளியிட்டு வருகிறது. அதன்படி பிளிப்கார்ட் இல் ஐபோன் 13 சிறந்த விலைக் குறைப்பை பெறும் என டீஸர் மூலம் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை: iPhone 13 விலை
Apple India இணையதளத்தில் ஐபோன் 13 இன் 128GB வேரியண்ட் விலை ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் Flipkart Big Billion Days நிகழ்வில் ஐபோன் 13 ரூ.49,990 என்ற விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 14 அறிமுகமான நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரும் அதற்கான பதிலை பார்க்கலாம்.

iPhone 12 மினி விலைக் குறைப்பு
iPhone 12 மினி விலை ரூ.40,000க்கு குறைவாக இருக்கும் என பிளிப்கார்ட் உறுதி செய்திருக்கிறது. ஐபோன் 12 மினி விலையானது ரூ.59,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பிளிப்கார்ட்டில் இந்த ஐபோன் மினி மாடல் சுமார் ரூ.55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் இந்த ஐபோன் மாடல் ரூ.40,000க்கு குறைவாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மினி அம்சங்கள்
ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ஆகிய இரண்டும் iOS 14 உடன் முன்பே நிறுவப்பட்டு A14 பயோனிக் சிப், 12MP தெளிவுத்திறன் டூயல் கேமரா அமைப்பு, iOS 16 மேம்படுத்தல் என பல ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஐபோன் 13 வாங்கலாமா?
ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது.
எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

12 எம்பி டூயல் ரியர் கேமரா
ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா.

சிறந்த பேட்டரி ஆயுள்
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவு இருக்கிறது.
ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.
பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications