வரதட்சணை கேட்டு கொடுமை., எனது தங்கைக்கு தொல்லை: Flipkart இணை நிறுவனர் மீது மனைவி புகார்!

|

சொத்தை தன் பெயருக்கு மாற்றித் தரும்படி தொந்தரவு செய்ததாகவும் தனது தங்கைக்கு தொல்லை கொடுத்ததாகவும் பிளிப் கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2008 சச்சின் பன்சால்-ஐ திருமணம் செய்து கொண்ட பிரியா

2008 சச்சின் பன்சால்-ஐ திருமணம் செய்து கொண்ட பிரியா

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் சச்சின் பன்சால். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பல் மருத்துவராக பணி புரிந்து வந்த பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

சச்சின் பன்சால் மீது காவல்நிலையத்தில் புகார்

சச்சின் பன்சால் மீது காவல்நிலையத்தில் புகார்

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சாலின் மனைவி பிரியா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கோரமங்கலா காவல்நிலையத்தில் தனது கணவர் சச்சின் பன்சால் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார்

காருக்கு பதிலாக ரூ.11 லட்சம்

காருக்கு பதிலாக ரூ.11 லட்சம்

அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சாலியோடு திருமணமான போது தனது தந்தை ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அதேபோல் தனது கணவருக்கு ஒரு காருக்கு பதிலாக ரூ.11 லட்சம் பணமாக கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சச்சின் பன்சால் குடும்பத்தார் மீதும் புகார்

சச்சின் பன்சால் குடும்பத்தார் மீதும் புகார்

இந்த நிலையில் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவரது பெயருக்கு மாற்றித்தருமாறு தொடர்ந்து கூறி தொந்தரவு செய்து வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அதில், அவரது கணவர் சச்சின் பன்சாலி, அவரது தந்தை சத்பிரகாஷ் அகர்வால், அவரின் தாய் கிரண் பன்சால் அவரது சகோதரர் நிதின் பன்சால் ஆகியோரது பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுத்தது போதும்: வெளியானது Realme 6, Realme 6 pro., கம்மி விலை அடடா அம்சங்கள்!பொறுத்தது போதும்: வெளியானது Realme 6, Realme 6 pro., கம்மி விலை அடடா அம்சங்கள்!

தங்கைக்கு தொல்லை கொடுத்தார்

தங்கைக்கு தொல்லை கொடுத்தார்

அதுமட்டுமின்றி தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவரது பெயரில் மாற்றும்படி கடந்த அக்டோபர் மாதம் துன்புறுத்தல் செய்ததாகவும், அவரது கணவர் சச்சின் பன்சாலி டெல்லிக்கு சென்றிருந்த போது தன் சகோதரியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குடும்பத்தோடு தன்னை துன்புறுத்தினர்

குடும்பத்தோடு தன்னை துன்புறுத்தினர்

மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மாற்றக் கோரிய போது மறுப்பு தெரிவித்ததன் காரணமாக தனது கணவரின் பெற்றோர் சகோதரர் ஆகியோர் சேர்ந்து தன்னை துன்புறுத்தியதாக அந்த புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாமீன் கோரிய சச்சின் பன்சாலி

ஜாமீன் கோரிய சச்சின் பன்சாலி

பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சாலி மீது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சச்சின் பன்சாலி, கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி ஜாமீன் கோரி விண்ணபித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Flipkart co founder Sachin Bansal's wife files dowry harassment case

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X