வால்மார்ட் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்கிய பிளிப்கார்ட்.!

|

வெளிவந்த தகவலின் அடிப்படையில் பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100சதவிகிதம் பங்குகளை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பிளிப்கார்ட் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் ஒன்றை துவங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்வோரை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய முடிவு

குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய முடிவு அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவைக்கு போட்டியாக அமையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜியோமார்ட் சேவையானது இந்திய முழுவதும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த விற்பனையகம் தனது

ஆனால் பிளிப்கார்ட் மொத்த விற்பனையகம் தனது பணிகளை வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பாதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் முதற்கட்டமாக மளிகை மற்றும் அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!

 நிறுவனத்தின் மொத்த விற்பனையக

பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனையக திட்டத்திற்கு தலைமை பொறுப்பை பிளிப்கார்ட் நிறுவன மூத்த துணை தலைவர் ஆதார்ஷ் மேமன் ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் வால்மார்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி சமீர் அகர்வால் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

தகவல் அடிப்படையில் வால்மார்ட்

வெளிவந்த தகவல் அடிப்படையில் வால்மார்ட் இந்தியா வியாபாரத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பிளிப்கார்ட் குழுமத்திற்கு மாற்றப்படுவர் இந்தியாவின் விலை குறைந்த பிராண்டாக இருக்கும் வால்மார்ட் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மார்ட் செயலியானது

அன்மையில்ஜியோ மார்ட் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயன்பாட்டுக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 சதவீத பங்குகளை வாங்கியது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்குமென்று வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.

பல பொருள்களும் எம் ஆர்

ஜியோமார்ட் தளத்தில் பல பொருள்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் மளிகை விற்பனையை ஜியோ மார்ட் சில்லரை விற்பனை கடைகள் மூலம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில்லரை
விற்பனையாளர்கள் தங்கள் சொந்த பிராண்டுகளை விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜியோமார்ட் சேவை

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை இயக்கப்படுவதால் சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பின் தளம் ஜியோமார்ட்டின் வரம்பை அதிகரிக்க உதவும். முதற்கட்டமாக வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவுகளை நடத்தப்பட்டது. வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஹாய் என்று அனுப்பியதும் அதன் சேவை குறித்த விவரங்கள் வரும். அதோடு ஆர்டர் செய்வதற்கான இணைப்பும் வரும்.

Best Mobiles in India

English summary
Flipkart acquires Walmart India, to launch Flipkart Wholesale for B2B segment in August: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X