Home
News

பிளிப்கார்ட் பிளாக் Vs அமேசான் பிரைம்.. ஷாப்பிங் முதல் ஓடிடி வரை.. 1 வருட சந்தாவில் எது பெஸ்ட்?

இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) நிறுவனங்கள் ஒரு வருட சந்தாவில் பல்வேறு சலுகைகளை கொடுக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங் தொடங்கி பிரீமியம் ஓடிடி சந்தா வரையில் சலுகைகளை வைத்திருக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனம், புதிய பிளிப்கார்ட் பிளாக் (Flipkart Black) சந்தாவை தொடங்கி இருப்பதால், இதை ஏற்கனவே இருக்கும் அமேசான் பிரைம் சந்தாவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

பிளிப்கார்ட் பிளாக் (Flipkart Black): இந்த பிளாக் சந்தாவின் விலை ரூ.1,499ஆக இருக்கிறது. ஆனால், புதிதாக அறிமுகமானதால் லிமிடெட்-பிரீயர் ஆஃபரில் ரூ.990 விலைக்கு கிடைக்கிறது. 1 வருட சந்தாவை இதில் பெற்று கொள்ளலாம். இதில் ரிவார்ட்ஸ், டிராவல், கேஷ்பேக் முதல் ஓடிடி ஆப்கள் வரையில் சலுகைகள் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட் பிளாக் Vs அமேசான் பிரைம்.. ஷாப்பிங் முதல் ஓடிடி வரை!

* யூடியூப் பிரீமியம் (YouTube Premium)
* சூப்பர்காய்ன் ரிவார்ட்ஸ் (SuperCoin Rewards)
* ஷாப்பிங் சலுகைகள், (Shopping Offers)
* டிராவல் நன்மைகள் (Travel Benefits)
* கஸ்டமர் சப்போர்ட் (Customer Support)

யூடியூப் பிரீமியம்:
இந்த பிளாக் மெம்பர்ஷிப்பில் முக்கிய சலுகையாக யூடியூப் பிரீமியம் சந்தா இருக்கிறது. ரூ.1,490 மதிப்பில் 12 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். யூடியூப் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆப்களில் ஆட்-ப்ரீ வீடியோ கிடைக்கிறது. ஆப்லைன் டவுன்லோட், பேக்கிரவுண்ட் பிளே மற்றும் யூடியூப் மிசிக் பிரீமியம் சலுகை கிடைக்கிறது.

சூப்பர்காய்ன் ரிவார்ட்ஸ்:
இந்த பிளிப்கார்ட் பிளாக் மெம்பர்கள் ஒவ்வொரு ஆர்டரிலும் 5 சதவீத சூப்பர்காய்ன்ஸ் கேஷ்பேக் (SuperCoins Cashback) பெற்று கொள்ளலாம். ஒரு ஆர்டருக்கு அதிகபட்சம் 100 சூப்பர்காயன்களை பெற்று கொள்ளலாம். ஆர்டர் செய்யும்போது, இந்த சூப்பர்காயன்களை பயன்படுத்தினால் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிளாக் Vs அமேசான் பிரைம்.. ஷாப்பிங் முதல் ஓடிடி வரை!

ஷாப்பிங் சலுகைகள்:
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் போன்ற முக்கிய விற்பனைகளின்போது முன்கூட்டிய அணுகல் கிடைக்கும். ஆகவே, பிரீமியம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்களில் பிரத்யேக பிளாக் டீல்கள் முன்னதாக பெறலாம். இதுபோன்ற பிரத்யேக விற்பனையின் போது கூடுதலாக 15 சதவீக உடனடி பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

டிராவல் நன்மைகள்:
கிளியர்ட்ரிப் (Cleartrip) மற்றும் பிளிப்கார்ட் டிராவல் (Flipkart Travel) ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்யும் பயணங்களை ரூ.1 கட்டணத்தில் ரத்து செய்து கொள்ளலாம் மற்றும் மறு திட்டமிடல் (Rescheduling) செய்து கொள்ளலாம். இதனால், அதிகம் டிராவல் செய்யும் நபர்களுக்கு இந்த சந்தா பக்காவான சலுகைகளை கொடுக்கிறது.

கஸ்டமர் சப்போர்ட்:
பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தல், ரிட்டர்ன் செய்தல், ரீபண்ட் பெறுதல் போன்ற எந்தவொரு சேவைக்கும் 24 மணி நேரமும் ப்ரியாரிட்டி கஸ்டமர் சப்போர்ட் (Priority Customer Support) கொடுக்கப்படுகிறது. இதில் காத்திருப்பு மற்றும் ஏஐ பாட்கள் இருக்காது. நேரடியாக கஸ்டமர் ஏஜென்ட்டை அணுகி கொள்ளலாம்.

அமேசான் பிரைம் (Amazon Prime): பிளிப்கார்ட் பிளாக் சந்தாவின் விலையை போலவே இந்த பிரைம் சந்தாவின் விலையும் ரூ.1,499ஆக இருக்கிறது. 12 மாதங்கள் சந்தா கிடைக்கிறது. கூடுதலாக இதில் ரூ.799 விலைக்கு பிரைம் லைட் (Prime Lite) சந்தா கிடைக்கிறது. அதேபோல 1 மாதத்துக்கு ரூ.299 செலுத்தியும் பெற்று கொள்ளலாம். இப்போது சலுகைகளை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிளாக் Vs அமேசான் பிரைம்.. ஷாப்பிங் முதல் ஓடிடி வரை!

* பிரைம் வீடியோ (Prime Video)
* ப்ரீ & ஃபாஸ்ட் டெலிவரி (Free & Fast Delivery)
* பிரைம் ஷாப்பிங் (Prime Shopping)
* பிரைம் மியூசிக், கேம், கிண்டில் (Prime Music, Game, Kindle)

பிரைம் வீடியோ:
பிளிப்கார்ட்டில் யூடியூப் பிரீமியம் சந்தா 12 மாதங்களுக்கு கிடைத்ததை போல இதில் பிரைம் வீடியோ சந்தா 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. ஆனால், மொபைல், டிவி, லேப்டாப் போன்ற 5 டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கிடைக்கிறது. இதிலும் ஆட்-ப்ரீ ஸ்ட்ரீமிங் கொடுக்கப்படுகிறது.

ப்ரீ & ஃபாஸ்ட் டெலிவரி:
இந்த அமேசான் பிரைம் சந்தாவில் அன்லிமிடெட் ப்ரீ டெலிவரி சலுகை கிடைக்கிறது. அதேபோல அதே நாளில் டெலிவரி (Same-day Delivery) மற்றும் 1 நாள் டெலிவரி (1 Day Delivery) சலுகைகளையும் இந்த சந்தா கொடுக்கிறது. ஆகவே, பிரைம் கஸ்டமர்கள் கூடுதல் வேகத்தில் ஆர்டர்களை பெற்று கொள்ள முடிகிறது.

பிளிப்கார்ட் பிளாக் Vs அமேசான் பிரைம்.. ஷாப்பிங் முதல் ஓடிடி வரை!

பிரைம் ஷாப்பிங்:
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல், அமேசான் பிரைம் டே சேல் போன்றவற்றை முன்கூட்டியே அணுக முடியும். அதேபோல பிரைம் ஆஃபர்களின் கீழ் கிடைக்கும் ப்ராடெக்ட்களுக்கு 10 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கும். அமேசான் பே கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கும்.

பிரைம் மியூசிக், கேம், கிண்டில்:
பிளிப்கார்ட் பிளாக் சந்தாவில் யூடியூப் மியூசிக் கிடைத்ததை போல இதில் பிரைம் மியூசிக் சந்தா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிரைம் கேம் மற்றும் பிரைம் ரீடிங் கிடைக்கிறது. இந்த ரீடிங் சலுகையில் அமேசான் கிண்டிலில் இலவசமாக ஈ-புக்குகள் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இப்படி பல்வேறு சலுகைகளை கொடுக்கிறது.

எது பெஸ்ட்?
பிளிப்கார்ட் பிளாக்கில் ஆர்டர் செய்யும்போது கேஷ்பேக், சூப்பர்காய்ன்ஸ் இருக்கின்றன. ஆனால், அமேசான் பிரைமில் ப்ரீ டெலிவரி மற்றும் வேகமாக டெலிவரி கிடைக்கிறது. ஓடிடியை பார்க்கையில், யூடியூப் மற்றும் பிரைம் வீடியோ என்று இரண்டுமே முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த 2 மெம்பர்ஷிப்பும் பிரத்யேக சலுகைகள் மூலம் தனித்து இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரே சலுகை போலத்தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Black Vs Amazon Prime Which Subscription is Best for You?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X