Home
News

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்!

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டிற்கான பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை நாட்களின் அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை ஜூலை 15 முதல் ஜூலை 18 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி கூடுதல் சலுகை

எஸ்.பி.ஐ வங்கி கூடுதல் சலுகை

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், எஸ்.பி.ஐ வங்கியுடன் இனைந்து பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை நாட்களில் எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியையும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிளஸ் சிறப்பு அனுமதி

பிளிப்கார்ட் பிளஸ் சிறப்பு அனுமதி

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி, காலை 8 மணி முதல் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனைக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீரப்பனின் போது டிவி, ஸ்மார்ட்போன், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பர்னிச்சர், போன்ற பல பொருட்கள் சலுகையுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

80% வரை பிளிப்கார்ட் சலுகை

80% வரை பிளிப்கார்ட் சலுகை

ஸ்மார்ட் டிவிகள் மற்றும் அதன் உபகரணங்கள் 75% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும், மேலும் பேஷன் வகை ஆடைகளுக்கு 80% வரை பிளிப்கார்ட் நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது, மேலும் ஏராளமான மொபைல் மற்றும் இதர சாதனங்களுக்கும் பல சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சலுகை

ஸ்மார்ட்போன் சலுகை

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ரியல்மி மொபைல்கள் ரூ. 7,499 என்ற விலையிலும், நோக்கியா 5.1 பிளஸ் ரூ.9,999 என்ற விலையிலும், போக்கோ F1, இன்பினிக்ஸ் நோட் 5 மற்றும் விவோ V9 ப்ரோ ரூ.14,050 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.

கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகை

கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகை

மேலும் கூடுதல் எக்ஸ்சேஞ் ஆப்ஃபர் சலுகையாக ரூ.2000 வரை வழங்கப்படுமென்று பிலிகார்ட் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகை விவோ V11 ப்ரோ, விவோ V11 மற்றும் ஒப்போ F9 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டேப்லெட்களுக்கு கூடுதல் சலுகை

டேப்லெட்களுக்கு கூடுதல் சலுகை

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் விற்பனை நாட்களில் லெனோவா மற்றும் அல்காடெல் டேப்லெட்கள் ரூ. 6,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (Samsung Galaxy Tab A) டேப்லெட்கள் ரூ.12,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான மொபைல் பாதுகாப்பு காப்பீடு

முழுமையான மொபைல் பாதுகாப்பு காப்பீடு

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பல கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நாட்களில் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு முழுமையான மொபைல் பாதுகாப்பு காப்பீடு வெறும் ரூ.99 என்ற விலையில் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் அறிய பிளிப்கார்ட் தளத்திற்குச் செல்லுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart big shopping days sales is the place to buy best smartphones in low price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X